கேடரிங் சர்விஸ்:
வீட்டில் நடக்கும் சுப கார்யங்களுக்கு வெளியிலிருந்து உணவை கேடரிங் செர்விஸ் மூலம் கொண்டுவந்து வழங்கலாமா ?
கூடாது என்று சொல்வதிற்கு இல்லை.ஏனெனில் சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் அநேகருக்கு இடவசதி சரியாக இருப்பதில்லை.உதவிக்கு ஆட்பலமும் குறைவு. இம்மாதிரியான நேரங்களில் கேட்டரிங் செர்விஸ் மூலம் உணவை தருவிப்பது இன்றியமையாதது ஆகி விடுங்கின்றன. ஆனால் ஒன்று சுமங்கலி ப்ராத்தனை ,ஸ்ராத்தம் ,ஹோமங்கள் போன்றவை நடக்கும்போது இல்லத்தில்தான் மடியாக சமைக்கவேண்டும்.
ஜபம்:
கார்,பஸ் ரயில் மூலம் போகும்போது ஜபம் செய்யலாமா?
இரு சக்ர வாகங்களில் செல்லும் போது ஜபம் செய்வதை தவிர்க்கவேண்டும்.விபத்து ஏற்படலாம் .ரயில் பயணத்தின்போது ஜபம் செய்ய தடை ஏதுமில்லை ஆனால் ஒன்று காலில் பாதரத்சை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .மேலும் பிறர் கவனத்தை ஈர்க்காமல் அமைதியாக ஜபம் செய்யவேண்டும்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks