பெண்கள் பூசனிக்காயை உடைக்கலாமா?
கூடாது .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தானம் தர்மம் ;
தானம்,தர்மம் இவை இரண்டும் ஒரே பொருளை குறிக்கும் வார்த்தைகள் தானே?
இல்லை. ஏதாவது குறிப்பிட்ட பலனை உத்தேசித்தோ அல்லது குறிப்பிட்ட பரிஹாரத்திர்க்கோ குறிப்பிட்ட பொருளை குறிப்பிட்ட நபருக்கு குறிப்பிட்ட நாளன்று அழிப்பது தானம்.குறிப்பாக பித்ரு காரியங்களில் தானம் விசேஷமாக சொல்லிவுள்ளது.
ஆனால் எந்த விதமான பலனை எதிர் பாராமல் எந்த பாகுபாடுமில்லாமல் ,ஏழை நலிந்தோருக்கு வுடனடியாக உதவி புரிவதும்,தேவைகளை பூர்த்தி செய்வதும் தர்மமாகும்.தர்மத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.தர்மம் செய்ய நினைத்தால் தள்ளி போடாமல் உடனே செய்து விடவேண்டும்


முருமணம்:
பெண்கள் மறுமணத்தை பற்றி தங்கள் அபிப்ராயம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
பெண்கள் மறுமணத்திற்கு சாஸ்திர சம்மதம் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் ஸ்ம்ருதி இடம் கொடுக்கலாம். சில தர்மங்கள் ஒவ்வரு யுகத்திற்கும் மாறலாம் \.அதற்க்கு யுக தர்மம் என்று பெயர். அப்படி பார்க்கும்போது நாம் இருக்கும் இந்த காலகட்டத்தில் நிர்பந்தமும்,சில காரண காரியங்களை உத்தேசித்தும் கணவனிடமிருந்து பிரிய நேரிடும்போது மனதிற்கு நியாயம் என்னப்பட்டால் பெண்கள் மறுமுறை திருமணம் செய்து கொள்ளலாம் என தோன்றுகிறது. மேலும் அந்த காலங்களில் தனியாக இருக்கும் பெண்ணிற்கு ஆதரவு அளிக்க நிறைய அண்ணன் தம்பிகள் மற்றும் பல உறவினர்கள் கூட இருந்தனர். ஆனால் தற்போது குடும்பங்கள் சுருங்கி சிறு சிறு குடும்பங்களாக காட்சி அளிக்கும் இன்றைய சூழ்நிலை பற்றி விவரிக்க தேவைஇல்லை' சட்டப்படி விவாஹரத்து ஆனபிறகு மறுமணம் செய்ய நினைத்தால்,முன்னாள் இருத்த உறவை முழுமையாக சாஸ்திர ரீதியாக ரத்து செய்வதற்கு கூட "கட ஸ்ராத்தம் "என்ற வைதீக கர்மாவை செய்யலாம். பொதுவாக இந்த ச்ராத்தத்தை,தீர்த்த கரையில் ஒருவரை உத்தேசித்து செய்துவிட்டால் பிறகு அந்த நபருக்கும்,இவருக்கும் தொடர்பு அறவே நீங்கிவிடுகிறது .


(நன்றி- ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள்)