கற்பூர ஆரத்தி
இல்லத்தில் தினமும் பூஜை செய்யும்போது கற்பூர ஆரத்தியை சுவாமிக்கு காட்டிவிட்டு பிறகு வாசல் நிலப்படிக்கும் சிலர் காண்பிக்கிறார்களே .?
தேவை இல்லை.பூஜைக்கு அங்கமாக வாசலில் தீபம்,கற்பூரம் காட்டும் பழக்கம் நம் சம்பிரதாயத்தில் கிடையாது.வெளியிலிருந்து வீட்டுக்குள் செல்லும் போதோ அல்லது வெளியே போகும்போதோ வாசல்படியை தாண்டித்தான் போகவேண்டும் .மிதிக்ககூடாது. தினமும் காலையில் கோலம் போடும்போது நிலப்படிக்கும் சேர்த்து கோலம் போடா வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅன்பு காட்டுவது:
அன்பு காட்டுவது என்றால் என்ன?
சொல்லுவது மிகவும் சுலபம்தான்.செயல் பதுத்துவது எளிதல்ல.குறிப்பாக நாம் வாழும் இந்த கால கட்டத்தில் சுநலம் மிகுயாக இருப்பதினால் பிறர்பால் அக்கறை செலுத்துவதோ,அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதோ பொதுவாக மனம் கொடுப்பதில்லை.இதையெல்லாம் மனப்பூர்வமாக செய்வதுதான் அன்பு.
மேலும் பலர் இன்று பிறருக்கு உதவி செய்வார்களே தவிர, தனது உறவினர்களையும் ,நமது சமூக ஏழைகளையும் உதாசினப்படுத்த தயங்குவதில்லை.அவர்களுக்கு ஏழை உறவு தேவை இல்லை.உறவே நம்மை வீட்டு அகன்றுவிடுகிறது.அன்பு செலுத்த வித்தியாசம் தேவை இல்லை. இந்த மனோபாவம் திரீரென உருவாகாது. விடாபிடியாக முயற்சி செய்து நமது ஏழை உறவினர்களிடம் அன்பு செலுத்துவோம் .

ஆலயங்களில் கணவன்,மனைவி சேர்ந்து பிரதிக்ஷனம் யார் முன்னே,யார் பின்னே செல்ல வேண்டும் என எதாவது வரிசை கிராமம் உண்டா?
உண்டு.பிரதிக்ஷனம் செய்யும்போது கணவன் முன்னும் மனை பின்னுமாக செல்வேண்டும் .அதே மாதிரி வேத பாராயணம்,ஹோமங்கள் நடக்கும் இடங்களிலும் இது தான் முறை.மனிவிக்கு முன்னாள் கணவன் செல்லவேண்டும்

முத்ரைகள் ;
ஹோமம் செய்யும்போது ஒரே மாதிரி கை விரல்களை சேர்த்து வைத்துக்கொள்ளாமல் ,ஒவ்வொரு மாதிரி விரல்களை சேர்த்து ஹோமம் செய்கிறார்களே. இதற்க்கு நியமம் எதாவது உண்டா?
அதற்க்கு முத்ரைகள் என்று பெயர்.த்ரவ்யத்திர்க்கு த்ரவ்யம் ஹோம முத்திரை மாறுபடும்.முத்ரைகள் மூன்று வகைப்படும்;
1.எல்ளையோ,நெய்யையோ ஹோமம் செய்யும்போது "ம்ருகீ முத்திரை (சுண்டு விரலையும் ஆள் காட்டி விரலையும் விட்டு விட்டு )மற்ற விரல்களை சேர்த்து செய்வது.
2.சமித்தில் ஹோமம் செய்யும்போது "ஹம்சீ முத்ரை" (சுண்டு விரலை விட்டுவிட்டு மற்ற விரல்களை சேர்த்து செய்வது)
3.சாரு(அன்ன) ஹோமத்தில் "வாராஹி முத்ரை " இதை "சுகரி முத்ரை" என்றும் கூறுவார்கள் (எல்லா விரல்களையும் சுருக்கி சேர்த்து செய்வது)

(நன்றி -ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள் )