குத்து விளக்கு;
தினசரி இல்லத்து பூஜையில் குத்து விளக்கு ஏற்றும்போது எத்தனை முகங்கள் ஏற்றவேண்டும் ?
பலமுகங்கள் அமைத்திருக்கும் குத்துவிளக்கை நித்ய பூஜையில் ஒன்றுக்கு மேல் முகம் ஏற்றும் பழக்கம் கிடையாது. ஐந்து முகம் கொண்ட விளக்கானால் ஒரு முகம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்குமாறு தினசரி ஏற்றலாம் .குத்து விளக்கு எப்போது ஏற்றினாலும் அதன் முகப்பில் குங்குமம் இடவேண்டும் .நமஸ்காரம் செய்யவேண்டும்.அதே மாதிரி விளக்கு மலையேறும்போது நமஸ்காரம் செய்து மலை ஏற்ற வேண்டும்.

காதில் துளைகள்;
இப்போதெல்லாம் சில பெண்கள் காதில் ஒன்றுக்கு மேல் துளை போட்டு காதணி அணிகிறார்களே .இது சரியா?
கூடாது.ஹிந்துக்கள் சம்பிரதாயப்படி காதில் ஒன்றுக்குமேல் துளை போடுவது அனாசாரம்

பூணூலும் ஜபமும்:
பூணுலை பிடித்துக்கொண்டு ஜபம் செய்யலாமா?
கூடாது..

சகுனங்கள்:
சகுனங்களை நம்பலாமா? அவை மூட நம்பிக்கைகளா?
பலரும் நம்புகிறார்கள். நானும் நம்புகிறேன்.வரபோவதை ஏதோ ஒரு வகையில் அடையாளம் அல்லது முனெச்சரிக்கை காட்டுவதாக நினைக்கிறார்கள் .சகுனம் எல்லாம் மூட நம்பிக்கை அல்ல.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஜலத்தில் நின்று ஜபம்;
ஜலத்தில் நின்று ஜபம் செய்யும் பொது கவனிக்கவேண்டிய விஷயங்கள் யாவை?
ஜலத்தில் முழங்கால் வரை நின்று ஜபம் செய்ய வேண்டும் .ஆனால் காயத்ரி ஜபத்தை மட்டும் கரையில் ஏறியே ஜபிக்கவேண்டும்.


(நன்றி-ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள் )