அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்து இட்டு மந்தரம் மத்தாக நாட்டி!
வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக்
கடைந்து இட்ட கைகளால் சப்பாணி
கார்முகில் வண்ணனே! சப்பாணி
பொருள்: ஆழமான பாற்கடலில் தேவர்கள் மந்தரமலையை மத்தாக நாட்டினர். வாசுகி
பாம்பினைக் கயிறாகச் சுற்றிக் கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை பகிர்ந்து கொடுத்த கண்ணனே! கரியமேகம் போன்ற நிறம் கொண்டவனே! உன் கைகளால் சப்பாணி கொட்டுவாயாக.