Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 222 - பெரியாழĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 222 - பெரியாழĮ

    மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்
    சூழ் பரி வேடமு மாய்
    பின்னல் துலங்கு மரசிலையும்
    பீதகச் சிற்றாடை ஒடும்
    மின்னற் பொலிந்தது ஓர் கார்முகில் போலக்
    கழுத்தினில் காறை யொடும்
    தன்னில் பொலிந்த இருடீ கேசன்
    தளர் நடை நடவானோ?
    பொருள்: வெண்நிலாவினைச் சுற்றி மின்னல் கொடிபோல சூழ்ந்திருக்கும் தங்கரேகை போன்ற பொன் ஆபரணத்தையும், அரசிலை ஆபரணத்தையும், பட்டாடையையும் அணிந்த கண்ணனே! பிரகாசிக்கும் கரியமேகம் போன்ற கழுத்தில் "காறை' என்னும் அணிகலனை அணிந்தவனே! இருடீகேசனே! இந்த ஆபரணங்களை அணிந்த
    அழகோடு தளர்நடையிட்டு வரமாட்டாயோ?
Working...
X