Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 228 - பெரியாழĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 228 - பெரியாழĮ

    வெண்புழுதி மேற்பெய்து கொண்டு அளைந்ததோர்
    வேழத்தின் கருங் கன்று போல்
    தெண் புழுதி ஆடித்திரி விக்கிரமன்
    சிறு புகர் பட வியர்த்து
    ஒண் போது அலர் கமலச் சிறுக்கால்
    உறைத்து ஒன்றும் நோவாமே
    தண் போது கொண்ட தவிசின் மீதே
    தளர் நடை நடவானோ?
    பொருள்: கருமையான யானைக்குட்டி, வெண்புழுதியை தன் மேனியில் பூசிக்கொண்டு திரிந்ததுபோல, மூவுலகத்தையும் தன் கால்களால் அளந்த திரிவிக்ரமனான கண்ணன் தெருப்புழுதியில் விளையாடி வியர்த்து நிற்கிறான். காலை வேளையில் மலர்ந்த தாமரை மலர் போன்று காட்சியளிக்கும் அந்தச் சின்னக் கண்ணனின் குட்டி பாதங்கள் புழுதியில் பட்டு நோகாமல், குளிர்ச்சிமிக்க பஞ்சுமெத்தையின் மீது தளர்நடை போட்டு வரக்கூடாதா?
Working...
X