Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் 234 - பெரியாழ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் 234 - பெரியாழ்

    போர் ஒக்கப் பண்ணி இப்பூமிப் பொறை தீர்ப்பான்
    தேர் ஒக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
    கார் ஒக்கு மேனிக் கரும் பெருங் கண்ணனே
    ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
    ஆயர்கள் போரேறே! அச்சோ அச்சோ.
    பொருள்:இந்த பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக யுத்தம் செய்தவனே! மலர் மாலை அணிந்திருக்கும் அர்ஜுனனின் தேரைச் செலுத்தியவனே! கருமேக மேனியனே! பெரிய கண்களைக் கொண்டவனே! கண்ணா! ஆயர்குலத்தில் உதித்த காளையே! என்னை அன்புடன் தழுவிக்கொள்.
Working...
X