என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே! அச்சோ அச்சோ
வேங்கட வாணனே! அச்சோ அச்சோ
பொருள்: வாமன வடிவோடு மகாபலியிடம் வந்த திருமால், தானம் பெறும் போது திரிவிக்ரமனாய் வளர்ந்து நின்றார். மகாபலியின் மகனான நமுசி, ""இது என்ன மாயச்செயல்! இவ்வாறு செய்வீர் என என் தந்தை சற்றும் நினைக்கவில்லை. முன்பிருந்த வாமனனாகவே மூன்றடி அளக்கவேண்டும்,'' என்று சொல்லி காலைப் பிடித்தான். அந்த நமுசியை வானை நோக்கி சுழற்றி வீசியவனே! ஒளி பொருந்திய கிரீடம் அணிந்தவனே! வேங்கட மலையில் (திருப்பதி) வாழ்பவனே! என்னை அணைத்துக் கொள்வாயாக.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks