ஆய்ச்சி அன்று ஆழிப்பிரான் புறம் புல்கிய
வேய்த் தடந்தோளி சொல் விட்டுச்சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ்மாலை ஈர் ஐந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே.
பொருள்: சக்ராயுதம் தாங்கிய கண்ணபிரான் குழந்தையாக இருந்தபோது, மூங்கில் போன்று வளைந்த தோள்களை உடைய யசோதையின் முதுகைக் கட்டிக் கொண்டு மகிழ்ந்தான். விஷ்ணு சித்தன் எனப்படும் பெரியாழ்வார் பாடிய இந்த பத்து பாடல்களைப் பாடுவோர் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்வர்.