ஆத்ம பிரதட்சிணம்
தனை தானே சுற்றிக்கொள்ளும் ஆத்ம பிரதட்சிணம் என்பது பிரதட்சினத்திற்கு மாற்று என்பது சரிதானா?
சரியல்ல.ஆத்ம பிரதட்சிணம் சந்தியாவந்தனத்தில் தவிர வேறு எங்கும் சொல்லப்பட்டதாக தெரியவில்லை.பிரதட்சிணம் செய்ய இயலாத சந்தர்பங்களில் நமஸ்காரம் மட்டும் செய்து விடலாம்.


மடி வஸ்திரம் :
நித்ய பூஜையில் மடி வஸ்திரம் இல்லாதபோது ஏற்கனவே துவைத்து மடித்து தனியாக வைத்திருந்ததை கட்டிக்கொண்டு பூஜை செய்யலாமா?
செய்யலாம்.ஆனால் அந்த வஸ்திரத்தை பிரணவம் சொல்லி புரோஷித்துவிட்டு ,சூர்யரஷ்மியில் காண்பித்து வஸ்திரத்தை தரித்துக்கொண்டு பூஜை செய்யலாம்.ஈர வஸ்திரமாக இருந்தால் அதை எழு தடவை உதறி விட்டு உபயோகப்படுத்தலாம்.


நன்றி(ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள்)