துளசி .

துளசியை பற்றி சிறிது விளக்கம்;
துளசியை மலையாக தொடுத்து பகவானுக்கு சாத்துவது நல்லது.குறிப்பாக விஷ்ணுவிற்கும் ,ஆஞ்சநேயருக்கும் இது மிகவும் ப்ரீத்தி.தளம் தளமாக எடுத்து அர்ச்சனை செய்யலாம்.துளசி மாலை ஜெபத்திற்கு மிகவும் சிறந்தது .இல்லத்தில் தினம்தோறும் காலை,மாலையில் மாடம் அரகில் விளக்கேற்றி பிரதிக்ஷனம் செய்து நமஸ்காரம் செய்வது பெண்களுக்கு மங்கலத்தை அளிக்கும். இல்லத்தை துர்தேவதைகள் அணுகாது.சுபீக்ஷம் ஏற்படும் பூஜை செய்த துளசி செடியிலிருந்து எந்த காரநத்திற்க்காவும்துளசியை பறிக்ககூடாது.ஸ்திரீகளும் ,மத்தியானத்திற்கு பிறகும்,த்வாதசி அன்றும் பறிக்கக்கூடாது. ஹோமத்தில் துளசி தளத்தை போடக்கூடாது.நெவேதனத்தின் பொது துளசி தளத்தை சேர்ப்பது விசேஷம்.அதே மாதிரி சம்பாவனை பண்ணும்போது தசினையுடன் சிறிது துளசி சேர்த்து அli ப்பது மிகவும் நல்லது.


வேண்டுதல்:

வடகலை பிரிவை சார்ந்த வைதீகத்தில் நம்பிக்கையுள்ள ஒருவர் மொட்டை அடித்துக்கொள்ளாமா.
நாம் எல்லோருக்கும் சிறு வயதில் முறைப்படி முடி இறக்கிய பிறகு ,எப் போதுமே மொட்டை அடித்துக்கொள்ளக்கூடாது .ஆனால் சாம வேத பிரிவினவர்க்கும்,மற்றும் சிலருக்கு மட்டும் இதில் சிறிது மாற்றம் உண்டு .


விவாஹமும் தர்பனமும்:

கல்யாணத்திற்கு பிறகு சில மாதங்கள் வரை கன்யா தானம் செய்து கொடுத்தவரும்,பிள்ளையின் அப்பாவும் அமாவாசை தர்ப்பணம் செய்யக்கூடாதாமே?
தவறு.செய்துதான் ஆகவேண்டும்.ஆனால் எள்ளுடன் சிறிது அட்சதை சேர்த்துக்கொள்ள வேண்டும்.தர்பணத்தை விடக்கூடாது.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsநன்றி;ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள்