தாடி வளர்க்கலாமா?
ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பது நல்லதா?
பொதுவாக கரணம் ஏதுமில்லாமல் ஆண்கள் தாடி வளர்க்க கூடாது. பித்ரு தீக்ஷை ,கர்ப தீக்ஷை ,வ்ரதங்கள் போன்ற காலங்களில் மட்டும் தான் தாடி இருக்கலாம்.அந்த குறிப்பிட்ட காலம் அல்லது கார்யம் முடிந்தவுடன் நாள் பார்த்து தாடியை எடுத்துவிடவேண்டும்..


ஸ்திரீகள் காலில் தங்கத்தில் ஆனா கொலுசு அணியலாமா?
கூடாது.இடுப்பிற்கு கீழ் ஸ்வர்ணத்தை அணிவது உசிதமல்ல.


ரிடைர்மென்ட்;


சர்வீசி லிருந்து சமீபத்தில் ஒய்வு பெற்ற வர்கள் சொச்ச வாழ்க்கையை பொதுவாக எப்படி உசிதமாக கழிக்கலாம்.எப்படி மாற்றிக்கொள்ளவேண்டும் .

மிக அருமையான கேள்வி.இதை பலர் யோசிப்பதே இல்லை.வாழ்க்கையை ஏனோ தானோ வென்று அப்படியே ஓட்டி விடுகிறார்கள்.உடல் ஆரோக்யமும்,வீட்டு சூழ்நிலையும் அனுகூலமாய் இருக்குமாயின் கீழ்கண்ட அம்சங்களை பற்றி,ஏற்கனவே செய்யாமலிருந்தால் யோசிக்கலாம்..
*தினமும் சந்தியாவந்தனத்தை தவிர சஹச்ர(1008) காயத்ரி ஜபம் செய்யலாம்.
*பஞ்சாயதன அல்லது சாளக்ராம பூஜை நித்யமும்ம் விதிப்படி செய்ய துவங்கலாம்.
*இலவசமாக ஏழை குழைந்தைகளை தேடி சென்று பாடம்,ஸ்லோகங்கள் சொல்லித்தரலாம்.
*வீட்டில் வசதி இருக்குமேயானால் தினசரி ஔபாசனம் செய்ய தொடங்கலாம்.
*ஆலயங்களில் கைங்கர்யம் போன்ற பொது செயல்களில்/சேவைகளில் ஈடுபட முயற்ச்சிக்கலாம்.
*தினமும் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு அனுஷ்டானங்கள் ,பூஜைகள் செய்யலாம்.
*சிகை வைத்துக்கொள்ளலாம்.குடுமியை ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் வைத்துக்கொள்ளவேன்டாமா?பள்ளிக்கூடம்,ஆபீஸ் என்ற காரணங்களை நாமே ஏற்படித்துக்கொண்டு குடுமியை ஒதிக்கிவிட்டொம்.குறைந்தது ரிடயர் ஆனபிறகாவது மிகவும் விசேஷமானதும் நமது அடையாளமுமாக இருக்கின்ற குடுமியை நாம் வைத்துக்கொள்ள யோசிக்க வேண்டும். வெட்கப்படக்கூடாது..
*ஆன்மிக சிந்தனையை தகுந்த குரு மூலம் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம்..
*மொத்தத்தில் ரி டைர்,பட் நாட் டயெர்டு(retired but not tired) என்ற எண்ணத்தில் யோசிக்க துவங்குங்கள் .வாழ்கை மிக பயனாகவும், மகிழ்ச்சி நிறைந்தாகவும் இருக்கும். வாழ்க பல்லாண்டு.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
(இத்துடன் கேள்வி-பதில் உங்கள் பெரும் ஆதரவுடன் முற்று பெறுகிறது)


(ஸ்ரீ சர்மா சாஸ்த்ரி அவர்களுக்கு மிக்க நன்றியுடன் நரசிம்ஹன்)