சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய்
சுரி குழலாரொடு நீ போடு
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்
குணம் கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்
பிரானே! திரியிட ஓட்டில்
வேய்த் தடந் தோளர் விரும்பு கருங் குழல்
விட்டுவே! நீ இங்கே வாராய்.
பொருள்: எங்கள் நம்பியே! கண்ணபிரானே! "என் தெய்வமே! உன்னை கும்பிடுகிறேன்' என்று சொல்லி கெஞ்சினாலும் நீ சொன்ன பேச்சை கேட்பதில்லை. சுருண்ட கூந்தலை உடைய பெண்களிடம் சேர்ந்து கைகோர்த்தபடி ஆட்டம் ஆடி வந்தால் எப்படி உன்னை ஏற்றுக் கொள்ள முடியும். காதை சுத்தம் செய்வதற்காக திரியிட அனுமதித்தால் பெரிய அப்பங்களைத் தின்னத் தருவேன். மூங்கில் போல தோள்களும், கருங்கூந்தலும் கொண்டபெண்கள் விரும்பும் விஷ்ணுவே! இங்கே வருவாயாக.