Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 264 - பெரியாழ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 264 - பெரியாழ்&#

    "முலை ஏதும் வேண்டேன்' என்று ஓடி நின் காதில்
    கடிப்பைப் பறித்து எறிந்திட்டு
    மலையை எடுத்து மகிழ்ந்து கல் மாரி
    காத்துப் பசு நிரை மேய்த்தாய்
    சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா
    திரு ஆயர்பாடிப் பிரானே
    தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே
    விட்டிட்டென் குற்றமே அன்றே.
    பொருள்: ""நீ கொடுக்கும் பால் ஒன்றும் எனக்கு வேண்டாம்'' என்று சொல்லியபடியே, காதில் அணிவித்த ஆபரணத்தைக் கோபத்தில் எறிந்தவனே! கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்துக் கல்மழையில் இருந்து ஆயர்களைக் காத்தவனே! பசுக்களை மேய்த்தவனே! வில்லை ஒடித்த வீரம் மிக்க ராமனே! மூன்றடியால் உலகை அளந்த திரிவிக்ரமனே! செல்வம் மிக்க ஆயர்பாடியில் அவதரித்தவனே! தலை நிற்காத குழந்தைப் பருவத்திலேயே காது வளர்க்காமல்(கம்மல் அணியும் வசதி செய்யாமல்) விட்டது என் குற்றமே,''.
    குறிப்பு: காதணி அணியும் போது வலியால் கோபித்தான் கண்ணன். அவன் அமைதி பெற யசோதை பாடுவது போல, தன்னை யசோதையாகப் பாவித்து பாடினார் பெரியாழ்வார்.
Working...
X