19.கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்
தான் மங்களம் ஆதலால்


தோஷமில்லாத ப்ரமாணமாய் திகழும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கெல்லாம் முதன்மையாக இருக்கும் திருப்பல்லாண்டு, வேதங்களுக்கு ஓம் என்று உச்சரிக்கும் ப்ரணவம் போலே, மற்றுள்ள ப்ரபந்தங்களுக்கெல்லாம் சங்ரஹமாகவும் (சாராம்சமாகவும்) மங்களகரமான மங்களாசாசனமாகவும் திகழ்கிறது.

20.உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்


திருப்பல்லாண்டுக்கு சமானமான ஒரு ப்ரபந்தம்தான் உண்டோ? பெரியாழ்வாருக்கு சமானமாக ஒருவர் உண்டோ? சிறுபிள்ளைதனமுடைய நெஞ்சே! ஈரத் தமிழாலே ப்ரபந்தங்கள் அருளிச் செய்த ஆழ்வார்களிடத்தில் தனித் தன்மையுடைய பெரியாழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்களை நீ வாசித்து விவேகித்து பார்ப்பாயாக!Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Unlike Share