Announcement

Collapse
No announcement yet.

Periva's inexplicable memory

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Periva's inexplicable memory

    Contributed by Forum Member Shri Sankara Narayanan

    தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மகா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார& #3021;. ஒரு மாத காலமாக மகான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.

    இந்தக் கும்பலில் அஞ்சல்துறை அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மகான் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்தி& #2994;் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது ஓயுவு நேரத்தில், மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மகானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்த்து. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிரார் என்பதே, அருள் பெற்றது போலத்தானே?

    சில தினங்களில் மகான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார்.

    இது நடந்து பல வருடங்களுக்குப் பின், மகான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார& #3021;. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்றவண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்தபின், இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்தபின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.

    தீர்த்தம் கொடுக்கும் முன், மகான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுரிக்கி இவரைப் பார்த்தார்.

    எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகார், “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க, மகான் புன்முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து, “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.

    இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்துவிட்டது என்றாலும், அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

    அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கைதூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால், ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்


Working...
X