உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். உண்மைதான், ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம், அதில் உப்பு சேர்த்திருப்பதாலேயே தான். 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்று சொன்னால், உடனே உப்பு இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட முடியாது என்று நினைக்க வேண்டாம். உப்பு அதிகம் சேர்த்தால், நம் உடலைத் தான் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் அதை அதிகம் உணவில் சேர்த்தால், உடலில் பலவகையான நோய்கள் தான் வரும். அதுவும் ஹைப்பர் தைராய்டிசம் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை அனைத்தும் உருவாவதற்கு உப்பே காரணம் ஆகும். இதற்கு காரணம் உப்பில் சோடியம் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சோடியம் உப்பில் மட்டுமில்லை, அன்றாட சமையலில் பயன்படுத்தும் சில மூலிகைப் பொருட்களிலும் உள்ளது. மேலும் உணவுகளில் போதிய அளவு சோடியம் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய சோடியத்தை உப்பிலிருந்து மட்டும் தான் பெற வேண்டுமென்பதில்லை, உணவுகளில் சுவைக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் ஒருசில மூலிகைகளிலும் சோடியம் உள்ளது. இந்த மூலிகைப் பொருட்கள் சுவை மற்றும் மணம் கொடுப்பதோடு, மருத்துவ குணங்களும் வாய்ந்தது. இதனால் உடலில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். இப்போது அத்தகைய உப்பிற்கு பதிலாக உணவிற்கு சுவையை தரும் ஆரோக்கியமான மூலிகைப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய மூலிகைப் பொருட்களால், உணவானது சுவையுடன் இருப்பதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே குறைந்த அளவுள்ள சோடியம் இருக்கும் மூலிகைப் பொருட்களை உணவுகளில் பயன்படுத்தி, ஆரோக்கியத்தையும், சுவையையும் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த மூலிகைப் பொருட்களைப் பார்ப்போமா!!!


பட்டை மசாலாப் பொருட்களில் ஒன்றாக பயன்படும் பட்டை, இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆசியாவின் பல இடங்களில் சமைக்கப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுக்கு சுவை கிடைப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கச் செய்யும்.

ஏலக்காய் நிறைய மக்கள் ஏலக்காயை வைத்து டீ போட்டு குடிப்பார்கள். அதிலும் ஏலக்காய் போட்டு சமைத்தால், உணவானது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, வித்தியாசமான சுவையும் கிடைக்கும். குறிப்பாக இதனை சீரகம் மற்றும் மல்லியுடன் சேர்த்து சமையலில் சேர்க்கும் போது, இதன் சுவை மற்றும் மணத்தி

பேசில் இந்தியாவில் சமைக்கும் போது பயன்படுத்தும் மூலிகைகளில் பேசில் இலையும் ஒன்று. இந்த இலை சற்று காரமான சுவையும் மற்றும் லேசான இனிப்பு சுவையையும் உடையது. இது வெறும் மருத்துவப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுவதோடு, உப்புக்கு பதிலாக உணவுகளில் சிறந்த சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.

சிவப்பு மிளகாய் சிவப்பு மிளகாய் வெறும் காரத்திற்காக மட்டும் பயன்படுவதில்லை. இது உணவில் காரத்துடன், ஒரு நல்ல சுவை தரும் பொருளாகவும் பயன்படுகி

பிரியாணி இலை பொதுவாக பிரியாணி இலை பிரியாணிகளில் மட்டும் தான் சுவைக்காக பயன்படுத்துவோம். ஆனால் அத்தகைய பிரியாணி இலை சற்று இனிப்பு சுவையுடன், மிகுந்த மணமுடன் இருக்கும். எனவே தான், இதனை உணவுகளில் சேர்த்தால், உணவின் சுவை சூப்பராக உள்ளது.

பூண்டு பொடி உணவில் பூண்டை சுவைக்கு மட்டும் பயன்படுத்துவதோடு, அதிலுள்ள மருத்துவ குணம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்பதால் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

மிளகு தூள் மிளகு தூளுக்கும் உப்புக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி உப்பை உணவில் சேர்க்கிறோமோ, அதேப் போல் தான் மிளகு தூளையும் சேர்க்கிறோம். உப்பில்லாமல், வெறும் மிளகுத் தூளை மட்டும் சேர்த்தாலும், உணவில் சூப்பரான சுவையைப் பெறலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசோயா சாஸ் சோயா சாஸை கூட உப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் சரியான அளவில் உப்ப இருப்பதால், அதை சமைக்கும் போது பயன்படுத்த நல்ல சுவை கிடைக்கிறது. அதுமட்மின்றி, சோயா சாஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சத்துக்கள் உள்ளன.

வெங்காயப் பொடி காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் மிகவும் காரமான சுவையுடையது. எனவே இதனை உணவில் சரியான அளவில் சேர்த்தால், சரியான ருசியைப் பெறலாம்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றிலும் சூப்பரான சுவை உள்ளது. அதிலும் நல்ல ஃப்ரஷ்ஷான எலுமிச்சை பழத்தை நறுக்கிப் பயன்படுத்துவது சிறந்த ருசியைத் தரும். அதுவே காய்ந்த எலுமிச்சையை பயன்படுத்தினால், பின் உணவில் சுவையே மாறிவிடும்.

சூரியகாந்தி விதை சூரியகாந்தி விதைகளில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் உப்பிற்கு பதிலாக சேர்க்கக்கூடிய சிறந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.