Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், ஸ்ரீரங்கப்பட&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், ஸ்ரீரங்கப்பட&

    ஸ்ரீரங்கபட்டணா வரும் பயணிகளுக்கான முக்கிய சுற்றுலா ஸ்தலம் இந்த ஷீ ரங்கநாதஸ்வாமி கோயிலாகும். இது 9ம் நூற்றாண்டில் கங்க வம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.



    மிகப்பெரிய கோயில்களுள் ஒன்றாக கருதப்படும் இந்தக்கோயில் பின்னாளில் விஜயநகர வம்சம், ஹொய்சள வம்சம் போன்ற ராஜ வம்ச ஆட்சிகளில் பலவிதமாக புதுப்பிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டுள்ளது.

    விஷ்ணு பஹவானின் ரங்கநாத அவதாரத்துக்கான கோயிலான இது பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.கருங்கல்லில் உருவாக்கப்பட்ட புன்முறுவலுடன் காட்சியளிக்கும் விக்கிரகத்தை இந்த கோயில் கொண்டுள்ளது. கர்ப்பகிருகத்தில் உள்ள இந்த விக்கிரகம் அனந்த சயன கோலத்தில் (பாம்பின் மீது பள்ளி கொண்டு) காட்சியளிக்கிறது.

    விஷ்ணுவின் 24 அவதாரங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்ட கலையம்சம் நிறைந்த தூண்கள் இந்தக் கோயிலில் வரிசையாக காணப்படுகின்றன. கோயில் உட்புறச்சுவர்களில் சீனிவாசக்கடவுள் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயரின் சிற்பங்களும் உள்ளன.

    கர்நாடக மாநிலத்தின் பெரிய கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கோயிலில் ஒரு உப்பரிகை, ஒரு பிரம்மாண்ட கோபுரம், தூண்களுடன் கூடிய ஒரு மண்டபம் ஆகியவை அடங்கியுள்ளன.

    இவை யாவுமே வெவ்வேறு காலகட்டத்தில் தனி இணைப்புகளாக கட்டப்பட்டுள்ளன. லட்சாத்வீபோத்சவம் எனும் 1 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும் சடங்குடன் கூடிய சங்கராந்தி திருவிழாவின் போது பயணிகள் இங்கு விஜயம் செய்தால் கூடுதல் விசேஷம்.

    வருடம் முழுதும் திறந்திருக்கும் இந்தக்கோயிலில் பூஜை நேரம் காலை 8 – 9.30 மற்றும் மாலை 7 – 8 மணியாகும்.

Working...
X