ஒலியும் படைப்பும்

ஒலியும் படைப்பும் - சப்தம் என்பது என்ன? vibration தான் (அதிர்வுதான்) என்று இன்றைய ஸயன்ஸில் சொல்கிறார்கள். அணுவிஞ்ஞானமும், ஐன்ஸ்டீன் கொள்கையும் என்ன சொல்கின்றனவென்றால அணுவுக்குள் புகுந்து பார்த்தால் எல்லா வஸ்துவும் ஒன்றுதான், அத்வைதம்தான். லோகமெல்லாம் ஒரே சக்தி வெள்ளம்தான். எல்லாம் ஒரே electro-magnetic (மின்காந்த) பிரவாஹம்தான். ஆனால் ஏன் இப்படி வேறு வேறு வஸ்துக்களாகத் தெரிகிறது என்றால், அந்த ஒரே சக்தியில் தோன்றுகிற வெவ்வேறு விதமான vibration களால் தான் என்று சொல்கின்றன.

அதிர்வு உண்டானால் சப்தம் உண்டாகிறது. இதையே திருப்பிச் சொன்னால், சப்தம் உண்டாக வேண்டுமானால் அதற்கான அதிர்வு ஏற்பட்டாக வேண்டும்.

ஒரே சக்தியில் பலவித vibration ஏற்படுவதால் லோக சிருஷ்டி உண்டாவதாகச் சொல்கிற விஞ்ஞானக் கருத்தும், பரமாத்மாவின் சுவாஸமான வேத சப்தத்திலிருந்து லோகம் வந்தது என்பதும் முழுக்க ஒன்றேதான்.
மநுஷ்யர்கள், பிராணிகள் இருக்கிறோம். நம்முடைய ஆரோக்யம், உணர்ச்சிகள் முதலியன எப்படி ஏற்படுகின்றன்?

நம்முடைய ச்வாஸ கதியிலிருந்துதான். நாடிகளில் ச்வாஸம் போகிறபோது ஏற்படுகிற vibration களால் தான் தேகத்தின் பல பகுதிகளுக்கும் ஆரோக்யம், அல்லது ஆரோக்ய குறைவு ஏற்படுகிறது. யோக ஸாதனங்களால் ச்வாஸப் பயிற்சி மூலம் மூச்சை நாடிகளில் ஒழுங்குப்படுத்திககொள்கிறவர்களுக்கு ஆச்சர்யப்படும்படின ஆரோக்யம் இருக்கிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅவர்களுடைய ரத்தக் குழாய்களை நறுக்கினால்கூட ரத்தம் கொட்டாமலிருக்கிறத நாடித்துடிப்பு, ஹ்ருதயத்துடிப்பு இவற்றைக் கூட நிறுத்திவிட்டு, அவர்களால் பூமிக்கடியில் உயிரோடு ஸமாதியில் இருக்க முடிகிறது. பாம்பும் தேளும் கடித்தாலும் விஷம் அவர்களைப் பாதிப்பதில்லை. மூச்சினால் உண்டாகும் நாடி சலனத்தை அவர்கள் ஒழுங்கு படுத்தியிருப்பதாலதான் இப்படி இருக்கிறது.

உடம்புக்கு மட்டும் தான் மூச்சு முக்கியம என்றில்லை. மனஸுக்கும் மனஸின் ஆரோக்யத்திற்கும் அதுவே முக்கியமாயிருக்கிது.

எண்ணங்களுக்கு மூலமான மனஸும், மூச்சுக்கு மூலமான பிராண சக்தியும் ஒன்றாகவே இருப்பதால்தான் இப்படியிருக்கிறது. நாடி சலனத்தாலேயே ஆரோக்யமான (நல்ல) அல்லது ஆரோக்யக் குறைவான (கெட்ட) எண்ணங்களும் உண்டாகின்றன. நீங்களே கவனித்துப் பார்த்தால் தெரியும். ஒரு தெய்வ ஸந்நிதானத்தில் அல்லது மஹானின் அருகில் மனஸ் சாந்தமாக இருக்கிறபோது மூச்சு எப்படி சஞ்சரிக்கிறது;காமத தினால், கோபத்தினால் வேகம் உண்டாகிறபோது ச்வாஸகதி எப்படியிருக்கிறது என்று பார்த்தால், ஒன்றுக்கொன்று நிரம்ப வித்யாஸமாயிருக்கு. ஸந்தோஷம் என்பதிலேயேகூட தெய்வ விஷயமாக ஒரு பஜனையில் அல்லது உத்ஸவத்தில் உண்டாகிறதற்கும், இந்திரிய சுகத்தை தருகிற விஷயங்களில் உண்டாவதற்கும் நாடி சலனத்தில் வித்யாஸம் தெரியும். பொதுவாக உத்தமமான ஸந்தோஷத்தில் மூச்சு வலது நாசித்துவாரத்தில் வரும்;வெறும் இந்திரிய ஸந்தோஷம் (புலனின்பம்) என்றால் இடது நாசித் துவாரத்தில் வரும்.

இத்தனை உணர்ச்சிகளுக்கும் ஆதாரமான சாந்தமான ஸத்வஸ்துவில் தியானம் வலுவாகிற போது, ஒரே சீராக, மிக மெதுவாக, இரு நாசிகளிலும் ஸமமாக மூச்சு வரும். இத்தனை உணர்ச்சிகளிலும் ஆதாரமான சாந்தமான ஸத்வஸ்துவில் தியானம் வலுவாகிற போது, ஒரே சீராக, மிக மெதுவாக, இரு நாசிகளிலும் ஸமமாக மூச்சு வரும். தியான லக்ஷ்யத்தில் ஒன்று பட்டுவிடுகிற போது மூச்சே நின்றுவிடும். மனஸும் நின்றுவிடும். ஆனால் உயிர் இருக்கும். ஞானம் என்ற பேருணர்வு பூரித்து இருக்கும்.

ஆக, ஜீவன் என்று எடுத்துக் கொண்டால், அவனுடைய ஜடமான சரீரம், சைதன்யமான அறிவு இரண்டும் ச்வாஸகதியால் உண்டாகி வளர்கிறவைதான்;அல்ல து அழிகிறவைதான். முறையான ச்வாஸகதி என்பது நம் உள்- vibration -களை ஒழுங்கு பண்ணிக் கொள்வதுதான்.

பரமாத்மாவிடமிருநதுதானே இத்தனை ஜட வஸ்துக்களும் சைதன்ய வஸ்துக்களும் தோன்றி விருத்தியாகின்றன?அ ழிவதும் வளர்வதுமாக இருக்கின்றன?இதற்கெ ல்லாம் ஏற்ற சலனங்கள் பரமாத்மா வஸ்துவில் ஏற்பட்டுத்தானே ஆகவேண்டும்?

பிரம்மம் நிர்குணமானது, சலனமற்றது என்கிற அத்வைதம் இருக்கட்டும். அந்த அத்வைதத்தின்படியுஇன்னதென்றே சொல்ல முடியாத (அநிர்வசனீயமான) மாயாசக்தியுடன் கூடி பிரம்மம் பலவான இந்த பிரபஞ்சமாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லித்தானே இருக்கிறது?வேஷமோ, கீஷமோ, இப்படி ஜடமான லோகமென்றும், சைதன்யமுள்ள ஜீவர்கள் என்றும் விவகார தசையில் இருக்கிறமாதிரி ஒப்புக்கொள்ளத்தான வேண்டியிருக்கிறது. மாயை என்று சொன்னாலும், அதற்கும் ஆதாரமான "மாயின்"என்று ஈச்வரனேதான் இருக்கிறான். ஆகக்கூடி மாயாசக்தி என்று சொல்லிவிட்டாலும், இது அத்தனையும் பரப்பிரம்ம வஸ்துவில் தோன்றின சலனங்கள் தான்; Vibration கள் தான். இத்தனை சலனங்களாலும் அது சலனமடையாமல், உள்ளூர நிர்குண சாந்த வஸ்துவாகவே இருக்கிறது.

ஆனாலும் நம் பார்வையில் சலனங்கள் உண்டுதான். அதுவும் கன்னாபின்னா சாந்த வஸ்துவாகவே இருக்கிறது. ஆனாலும் நம் பார்வையில் சலனங்கள் உண்டுதான். அதுவும் கன்னா பின்னா என்று இல்லாமல் பெரிய பெரிய சூரியன் முதலான கிரஹங்களின் ஸஞ்சாரத்திலிருந்த ஆரம்பித்து, ஒரு சின்ன புல், பூண்டு அல்லது கொசு உண்டாகிற வரை, எல்லாம் ஒரே மாதிரி நியதிப்படி, ஒழுங்குப்படி நடந்து வருகிறது.

லோக வாழ்க்கை க்ஷேமகரமாக நடக்க இந்த ஒழுங்குதான் ஒத்தாசை பண்ணுகிறது. இயற்கைச் சக்திகளை எல்லாம் ஒழுங்குப்படுத்திததான் பரமாத்மா லோக வாழ்க்கையை உண்டாக்கியிருக்கிர். ஆனாலும் இதிலே கொஞ்சம் கொஞ்சம் ஒழுங்கு தப்பிப்போகிற மாதிரியும் நடக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார். வாழ்க்கைக்கு அநுகூலம்

செய்யவேண்டிய இயற்கைச் சக்திகள் அப்படிச் செய்யாமலிருக்கிறதயும் பார்க்கிறோம். காலத்தில் மழை பெய்யமாட்டேன் என்கிறது;அல்லது வெள்ளம் வருகிறது. வேறு ஏதாவது உத்பாதம் உண்டாகிறது.

source:subadra