அடி உதவுபது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் .(தவறு)
அடி (இறைவனின் திருவடி) கலை பற்றிகொண்டவனுக்கு இறைவன் எப்படி உத்வுகின்றானோ அப்படி தன சொந்த அண்ணன் தம்பிகள் உதவமாட்டார்கள் (சரி) இந்த காலத்திற்கு இது சரியாக இருக்கும் ....

அடி என்பது இறைவனின் திருவடிகளை குறிக்கிறது. நம்முடைய கஷ்ட காலங்களில் இறைவனின் திருவருள் உதவுபதுபோல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்பதே இப்பழமொழியின் உண்மை அர்த்தம். நாமோ நாம் கொடுக்குக் அடிதான் சரியாக செயல் படுகிறது என்று நினைக்கிறோம்.


மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா(தவறு)
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா.(சரி)
ஆற்றை கடக்க நினைப்பவன் வெள்ளம் ஏற்படும்போது ஆற்றில் இருக்கும் மணல் மேடுகள்(குதிர்) மேல் நின்று கொண்டு தப்பித்து கொள்ளலாம் என்று நினைத்து இறங்கிவிட்டால் வெள்ளம் அவனை அடித்துக்கொண்டு போய்விடும் என்பதே இதற்கு அர்த்தம்.


வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை (தவறு)
வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை (சரி)
இன்று வாத்தியாரையும் போலீசையும் கேலி செய்யும் விதமாக இப்பழமொழியை நாம் தவறாக உபயோகிக்கிறோம்.வாக்கு (கற்றல்) தான் அறிந்து கொண்ட பற்பல பாடங்களை மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் திறமை உள்ள பெரியோர் தான் வாத்தியார்.வேலைக்கு தகுதியானவர். அதே போல 'போக்கு கற்றல்' திருடனின் போக்கு என்ன என்பதை சரியாக அறிந்தவர் தான் போலீஸ் வேலைக்கு தகுதி யானவர் என்பதே சரியான விளக்குமாகும்.


கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் (தவறு)
கல்லான் ஆனாலும் கணவன் , புல்லான் ஆனாலும் புருஷன் (சரி)
கல்வி அறிவு அற்ற (கல்லான்) படிக்காதவனாக இருந்தாலும் கணவன் கணவனே. அன்பற்றவராக (புல்லான்) இருந்தாலும் புருஷன் புருஷனே என்பது தான் இந்த பழமொழியின் உண்மை பொருள். (சரி)

(இந்தக்காலத்தில் எந்த பெண் இதை ஒப்புத்துகொள்வார் என்று தெரியவில்லை.)?


கண்டதை கற்க பண்டிதன் ஆவான்.(தவறு)
கண்டு அதை கற்க பண்டிதன் ஆவான்.(சரி)
நல்ல நூல்களை கண்டு ஆராய்ந்து தேடி எடுத்து கற்கும் ஒருவன் காலக்ரமத்தில் அனைராலும் போற்றப்படும் பண்டிதன் ஆவான் என்பதே இதன் சரியான பொருள் ஆகும்.

source:A free weekly .