வேத மத ம் - ஒலியும் படைப்பும் Part 2

ஒழுங்கு தப்பிப் போவதில் இந்த மநுஷ்ய மனஸ் இருக்கிறதே, அது எவ்வளவு தூரம்தான் போகும் என்றே சொல்ல முடியாமல், குட்டிச் சாத்தனாக அலைகிறது.பிரபஞ்ச வாழ்க்கை முழுதிலும் எத்தனையோ ஒழுங்கு, கட்டுப்பாடு, நியதி இருந்தாலும், இந்த மனஸை எடுத்துக் கொண்டால், இது மட்டும் ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் வெறிநாயாகத் திரிகிறது.

இயற்கைக் சக்திகள் நமக்குப் பிரதிகூலமாக இருக்கிற போது, அவற்றைச் சரிப்படுத்த வழி உண்டா?நம் மனஸைக் கன்னாபின்னா என்று விடாமல் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஏதாவது வழி இருக்கிறதா?

சலனம் - சப்தம் இதனால்தான் சகல காரியமும் ஏற்பட்டிருக்கிறது என்றால், லோக சக்திகளை அநுகூலம் பண்ணித்த தரவும், நம் சித்தத்தையே சுத்தம் பண்ணிக் கொடுக்கவும் கூடச் சப்தங்கள் இருக்கத்தான் வேண்டும். அவைதான் வேதம், வேதம் என்பது.

நம்முடைய ச்வாஸகதியாலேயே, நாம் யோக மார்க்கத்தின் மூலம் பரமாத்மாவின் ச்வாஸத்தைப் பிடித்து, லோகோபகாரமாகவும், ஆத்ம க்ஷேமகரமாகவும் உள்ள காரியங்களை நடத்திக் கொள்ளலாம். இங்கே நாடி சலனம் இருந்தாலும் அது மநுஷ்யக் காதுக்கு எட்டக் கூடிய சப்தமாக இருக்கவில்லை. ஸயன்ஸிலேயே மநுஷ்யனின் காதுக்கு எட்ட முடியாத சப்தங்கள், மநுஷ்யக் கண்ணின் லென்ஸுக்கு அகப்படாத ஒளி அலைகள் எல்லாம் உண்டு என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்க

இது மட்டுமில்லை. எட்ட முடியாததை நமக்கு எட்டுகிற மாதிரி மாற்றிக் கொடுக்கவும் முடிகிறது. ரேடியோவில் ஒருத்தன் பாடுகிறான் என்றால், முதலில் அவன் பாடுகிற சப்தங்கள் மின்சார சக்தியினால் ஒரு விதமான காந்த அலைகளாக மாறிவிடுகின்றன. இப்படி மாறின அலைகள்தான் ஆகாசத்தில் விடப்படுகின்றன. அப்போது இவற்றை நம் காதால் கேட்க முடிகிறதா?இல்லை. ஆனாலும் ரேடியோப் பெட்டியில் உள்ள கருவிகள் ஆகாசத்தில் இருக்கிற அந்த மின்சாரக் காந்த அலைகளைப் பிடித்து, மறுபடி நம் காதுக்கு எட்டுகிற மாதிரியே சப்த அலைகளாக்கிப் பாட்டாகக் கொடுக்கிறது.

இதைச் சொல்லும் போது விஞ்ஞானம் மதத்துக்கு விரோதியே இல்லை;மதத்தை வளர்க்க அதுவேதான் ரொம்ப ஒத்தாசை செய்கிறது என்று தோன்றுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன் டெலிபோன், ரேடியோ ஆகியன வருவதற்கு முந்தி, 'வேதசப்தமாவது, ச்வாஸமாவது?'என்று யாராவது நாஸ்திகர்கள் ஆக்ஷேபணை கிளப்பியிருந்தால், அவர்களுக்குப் பதில் சொல்லவே முடியாமல் இருந்திருக்கும். இப்போது இந்த ஸயன்ஸ் discoveries (கண்டுபிடிப்புகள்) தான் நமக்குக் கை கொடுக்கின்றன.

ஜடமான ரேடியோ பெட்டிக்கு இருக்கிற சக்தியை சைதன்யமுள்ள ஜீவர்களும் சம்பாதித்துக் கொள்ள முடியும். அதற்கு மேலும் செய்ய முடியும். தபஸ்தான் இந்த சக்தியைத் தருவது. ஒரு ஸத்தியத்தைத் தெரிந்து கொண்டுதான் ஆவது என்று, அதற்காக அன்ன ஆகாரத்தை விட்டு, வீடு வாசலை விட்டு, எப்போது பார்த்தாலும் அதே சிந்தனையாக மனஸை ஒருமுகப்படுத்தி விட்டால், அதுதான் தபஸ். இத்தனையிலும், 'நான் இத்தனை பிரயாசைப்படுகிறேனஅல்லவா?அதனால் எனக்கு ஸத்தியம் தெரிந்தே ஆகவேண்டும்'என்ற அஹம்பாவம் இருக்கக்கூடாது. நாம் எத்தனை பிரயாஸைப் பட்டாலும், பகவத் பிரஸாதமாகத்தான் எந்த ஸத்தியமும் பிரகாசிக்கும் என்ற விநயம் எப்போதும் இருக்கவேண்டும். இம்மாதிரி தபஸ் பண்ணி, யோக நிலையில் உச்சிக்குப் போனவர்கள்தான் ரிஷிகள்.

ரிஷிகளுக்கு லோக ஸ்ருஷ்டியிலே ஏற்படும் சகல சலனங்களும் -அதாவது பரமாத்மாவின் ச்வாஸகதிகளும் - தெரிந்தது. தெரிந்தது மட்டுமில்லை;மின்சா ர அலையை சப்தஅலையாக convert பண்ணுவது (மாற்றுவது) போல, அந்த சலனங்களுக்குரிய சப்தங்கள் மநுஷ்யக் காதுக்கு எட்டுக்கு சப்தங்களாகவும் அவர்களுக்குத் தெரிந்தன. அப்படிப்பட்ட சப்தங்களையே வேத மந்திரங்கள் என்று தந்திருக்கிறார்கள

ஒன்று தோன்றுகிறது. வேதத்துக்கு "ச்ருதி"என்று ஒரு பேர். கேட்கப்படுவது எதுவோ அதுவே ச்ருதி. ச்ரோதம் என்றால் காது. புஸ்தகத்தில் எழுதிப் படிக்காமல், குரு சிஷ்ய பரம்பரையாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே வேதம் தலைமுறை தலைமுறை வந்திருப்பதால் அதற்கு "ச்ருதி"என்று பேர் ஏற்பட்டிருப்பதாகச சொல்கிறார்கள். எழுதிப்படிக்கக் கூடாது என்று ஏன் வைத்தார்கள் என்றால் வேத சப்தங்களை இப்படி எழுத முடியாது என்பதால்தான். 'ழ'வுக்கும், 'ள'வுக்கும் நடுவிலுள்ள சப்தம் மாதிரி, லிபியில் கொண்டு வர முடியாத பல சப்தங்கள் வேதத்தில் உண்டு. காதால் கேட்டுத்தான் இவை வரவேண்டும். அதோடுகூட உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்றெல்லாம் வேத மந்திரங்களுக்கும் ஸ்வரமும் உண்டு. அதாவது ஒரு அக்ஷரத்தை உயர்த்த வேண்டும். இன்னொன்றைத் தாழ்த்திச் சொல்ல வேண்டும். சிலதை ஸமமாகச் சொல்ல வேண்டும். சிலதை சமமாக சொல்ல வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபுஸ்தகத்தில் எத்தனைதான் diacritical mark போட்டு காட்டினாலும், அச்சுப்பிழை வந்து விட்டால், உச்சாரணக் கோளாறாகும்;உச்சரிபபு தப்பினால் பலனே போய்விடும். ஒர் அக்ஷரத்தை அழுத்தி அல்லது மெல்லிசாகச் சொல்லுகிறதால் ஏற்படுகிற சலனத்துக்கும் இன்னோர் அக்ஷரத்தை அப்படிச் சொல்வதால் உண்டாவதற்கும் நிறைய வித்யாஸமிருக்கும். நம்முடைய உணர்ச்சிகள், இயற்கையை நடத்தி வைக்கும் தேவசக்திகள், இவையும் இந்த வித்யாஸத்துக்கு ஏற்ப மாறிப் போகும்.

Contd....in Part 3

Source:subadra