உயிரைக் காப்பாற்றுகிற ஒரு அபூர்வ மருந்தைக் காப்பாற்றுவதற்கு லாபரட்டரியில் எத்தனையோ ஜாக்ரதை செய்து வைத்திருப்பது போல, லோகத்தை ரக்ஷிக்கிற வேத சப்தங்களை எழுதி வைக்காமலே வாய் வார்த்தையில் லவலேசம் கூட மாறிப் போய் விடமால் காப்பாற்றித் தருவதற்காக, நம் பூர்விகர்கள் இப்படிப்பட்ட பாட முறைகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள
ஸம்ஹிதா பாடத்திலும், பத பாடத்திலும் மந்திரத்திலுள்ள வார்த்தைகளை அதே ஆர்டரில் ஒவ்வொன்றையும் ஒரே தரம் மட்டும் சொல்வதால் இவை ப்ரகிருதி (இயற்கை
யான)
பாடம் எனப்படுகின்றன. மற்றவை விக்ருதி (செயற்கையான) பாடம் எனப்படும். க்ரமத்திலே வார்த்தைகள் ஒன்று - இரண்டு - மூன்று அசல் பிரகிருதியாகவே போகாவிட்டாலும், இரண்டுக்கப்புறம் ஒன்று, மூன்றுக்கப்புறம் இரண்டு என்று தலைகீழாகத் திரும்பாததால், அதைப் பூரணமான விக்ருதி என்று சொல்ல முடியாது. முழு விக்ருதியானவை க்ரமம் தவிர எட்டுப் பாடவகைகள் ஆகும். அஷ்ட விக்ருதி என்ற இந்த எட்டு விதமான பாடங்களின் பெயர்களையும் ஒரு ச்லோக ரூபமாக நினைவில் வைத்துக் கொள்கிற மாதிரிச் சொல்வதுண்டு:
ரொம்பவும் ஆதிகாலத்தில் மஹரிஷிகளாலேயே இந்தப் பாடமுறைகள் ஏற்படுத்தப் பட்டன.
வேதம் வாய்மொழியாக மட்டுமே (புஸ்தகத்தில் எழுதி வைக்காமல்) வரும்போது, அதன் ரூபம் கொஞ்சமும் மாறக்கூடாது என்றால், அதற்கு இத்தனை விதமான பாடமும் இருந்ததாக வேண்டும் என்று வைத்தார்கள். பதத்தில் வார்த்தை வார்த்தையாகவும், க்ரமத்தில் இரண்டிரண்டு வார்த்தையாகவும், ஜடையில் அதை முன்பின்னாகவும் இப்படியெல்லாம் பல தினுசில் சொல்வது ஒன்றுக்கொன்று tally ஆவதால் (ஒத்துப் போவதால்) மூலரூபம் மாறாவே இல்லை என்று நிச்சயமாகிறதல்லவா? அதனால் இத்தனை விதமான பதச் சேர்க்கை முறைகளும் இருக்க வேண்டும் என்று வைத்தார்கள். இதில் ஒன்றைவிட இன்னொரு தினுசில் அத்யயனம் பண்ணுவதற்குப் பலனும் இத்தனை மடங்கு ஜாஸ்தி என்று கூடச் சொல்வதுண்டு.
(ஸம்ஹிதா பாடத்தைவிட இருமடங்கு பலன் கொண்டது பத பாடம்;நான்கு மடங்கு பலனளிப்பது க்ரம பாடம்;நூறு மடங்கு பலன் வாய்ந்து 'வர்ண க்ரமம்'என்ற பாடமுறை;ஆயிரம் மடங்கு பலனளிப்பது ஜடாபாடம்.)
அநாதியான வேதம் மாறவே கூடாது என்பதற்காக இத்தனை ஜாக்ரதையாக நம் முன்னோர்கள் அதன் ரூபத்தை ரக்ஷித்துக் கொடுத்திருக்கும்பது, வேத சப்தங்கள் எப்படி மாறின என்பதைப் பார்த்து வேதத்துக்குக் கால நிர்ணயம் பண்ணுகிறோம் என்று நவீன கால ஆராய்ச்சியாளர்கள் கிளம்பியிருப்பது, ஒரு போதும் யதார்த்தத்தை உள்ளபடி அறியப் பிரயோஜனப் படாது.
Bookmarks