எனவே, தா*ளி*ப்பதை ஏனோ தேனாவெ*ன்று செ*ய்யாம*ல் எ*ல்லாவ*ற்றையு*ம் ச*ரியாக*ப் போ*ட்டு தா*ளி*த்து**ச் சா*ப்*பிடு*ங்க*ள்.
தக்காளி நீண்ட நாள் வர. தக்காளி பழங்களை வாங்கியது*ம் பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்கா*தீ*ர்க*ள். அதற்கு பதிலாக அதன் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.
காலை உணவிற்கு பின் நூடுல்ஸ் மீதம் வந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் தயாரிக்கலாம்.
காலை டிபனுக்கு அரிசி குருணையில் உப்புமா செய்வது வழக்கம். அவ்வாறு செய்கையில், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, அதே அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி, வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த உப்புமா, புதுமையாகவும் சுவையோடும் காணப்படும்.
உருளைக்கிழங்குகள் முளைவிடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கவும்.
சிலருக்கு இட்லி கனமாகவும் கெட்டியாகவும் காணப்படும். மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.
Bookmarks