உணவில் கறிவேப்பிலையை பார்த்தலே ஏதோ ஆகாத பொருளைக் காண்பதுபோல தூக்கி எறிந்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம். ஆனால் கறிவேப்பிலை புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடுயூட் ஆப் கெமிகல் பயாலஜி, மற்றும் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களின் ஆய்வில் பல்வேறு அதிசயத்தக்க உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது. இதன் காரணமாக புரஸ்ட்டேட் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடுகு, கறிவேப்பிலை தாளிப்பு உணவு சமைக்கும் போது இறுதியில் கறிவேப்பிலையையும், கடுகையும் சேர்த்து தாளிக்கின்றோம். அப்பொழுதுதான் சமையல் முழுமையடைகிறது. இதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பது பற்றி திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக் கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர். இத்தனை நன்மை கொண்ட கறிவேப்பிலையை இனி தூக்கி எறிய மாட்டீர்கள்தானே?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsPosted by: Mayura Akilan

http://tamil.boldsky.com/health/herbs/2012/