Announcement

Collapse
No announcement yet.

கால ஆராய்ச்சி சரியல்ல – Part 1

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கால ஆராய்ச்சி சரியல்ல – Part 1

    கால ஆராய்ச்சி சரியல்ல – Part 1

    வெள்ளைக்காரர்கள் விஷயத்துக்கு ஏன் வந்தேன் என்றால், வேதாம் அநாதி என்பதைப் பற்றிச் சொல்லும்போது, வெள்ளைக்காரர்களின அபிப்ராயத்தைச் சொல்ல வந்தேன். வேதம் அநாதி என்றால் அவர்களுடைய மனப்பான்மைக்கு அது ஏற்கும்படியாக இல்லை. என்னதான் நடுநிலைமை, Scientific research என்றாலும், 'இந்த ஹிந்துக்களின் புஸ்தகத்துக்கு இப்படி ஒரு ஏற்றம் தருவதா?என்று அவர்களில் சிலருக்கு மனஸுக்கு ஸம்மதப்படவில்லை. இன்னும் சில பேர்

    இப்படியில்லாவிட்டலும் பகுத்தறிவுப்படி, ஸயன்டிஃபிக்காக ஆராய்ச்சி பண்ணத்தான் எதையும் ஒப்புக்கொள்ளலாம் என்ற அபிப்ராயத்தில் ரிஸர்ச் செய்திருக்கிறார்க அநாதி என்கிற வாதத்தை ஏற்கமுடியாமல், இதே ரீதியில் அநேகம் படித்த ஹிந்துக்களும் ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார்ள்.

    இவர்கள் ஆராய்ச்சி மூலம் காலம் கணிப்பதில் முக்யமாக இரண்டு தினுசு இருக்கிறது. ஒன்று வானசாஸ்திர ரீதியில் (astronomical -ஆகப்) பண்ணுவது. இன்னொன்று பாஷையின் ரூபத்தை வைத்து நிர்ணயம் பண்ணுவது. இப்படிச் செய்து வேதத்துக்கு வந்திருக்கிறார்கள என்றால், அதுதான் இல்லை. ஒவ்வொரு அறிஞர் ஒவ்வொரு அபிப்ராயத்தைச் சொல்கிறார். திலகர் கி.மு. 3000 என்கிறார்கள். அதைவிடக் கிட்டத்தில் கி.மு. 1500-க்கு வேதகாலத்தை இழுத்து விட்டிருக்கிறவர்கம் உண்டு.

    மற்ற மதப் புஸ்தகங்களைப் பற்றி இப்படி அபிப்ராய பேதம் இல்லை. பௌத்தர்களின் த்ரிபிடகத்தை எடுத்துக் கொண்டால் அது அசோகன் காலத்தில் எழுதப்பட்டது என்றும், ஆனாலும் அதிலுள்ள புத்தரின் உபதேசங்கள் அசோகருக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முந்தி, அதாவது இன்றைக்கு 2500 வருஷத்துக்கு முன் புத்தர் சொன்னவை என்றும் ஏகமனதாக அபிப்ராயப்படுகிறாகள். பைபிளின் ந்யூ டெஸ்ட்மென்ட் உண்டாகிக் கிட்டதட்ட 2000 வருஷம் ஆகிறது என்பதிலும் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கிறது. குரான் உண்டாகி சுமார் 1300 வருஷம் ஆகிறது என்று ஸகலரும் ஒப்புக் கொள்கிறார்கள். நம் வேதத்தின் விஷயத்தில் மட்டும் இப்படி ஒரு முடிவான தீர்மானம் ஏற்படாமலிருக்கிறத

    இரண்டு தினுசான காலக்கணக்கு என்று சொன்னேனே, அதைக் கொஞ்சம் விளக்க வேண்டும். வேதத்திலே சில இடங்களில் அப்போதிருந்த கிரஹங்களின் நிலைமை பற்றிச் சொல்லியிருக்கிறது. இப்படிப்பட்ட astrological conjunction (கிரஹச் சேர்க்கை) எப்போது ஏற்பட்டிருக்கும் என்று வான சாஸ்திரப்படிக் கணக்குக்கு வருகிறார்கள்.

    ஆனால் இந்த மாதிரியான கிரஹச் சேர்க்கை ஒரே ஒரு தடவை கி.மு. 6000-ல் தான் ஏற்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?அதற்கு முந்தியும் பல தடவை இதே மாதிரி இருந்திருக்கும். இந்த சிருஷ்டியில் மட்டுமில்லாமல், இந்த சிருஷ்டிக்கு முற்பட்ட பிரளயத்துக்கு முந்தியிருந்த சிருஷ்டிகளிலும் இதே கிரஹ நிலைமைகள், planetary positions எத்தனையோ தடவை இருந்திருக்கும்.

    வேதத்திலே குறிப்பிட்டிருப்ப இவற்றில் எது எப்படித் தீர்மானமான முடிவு பண்ணுவது?ஆகையால், காலத்தையெல்லாம் துளைத்துக் கொண்டு பார்க்கக்கூடிய அதீந்திரிய சக்தி வாய்ந்த ரிஷிகள் சேர்த்துக் கொடுத்த வேதங்களில் இப்படிப்பட்ட கணக்குகள் பொருந்தாமல்தான் இருக்கின்றன. வேதத்திலேயே இருக்கப்பட்ட உட்சான்று (InternalEvidence) என்று ஆராய்ச்சிக்காரர்கபெரிதுபடுத்துகிற வானசாஸ்திரக் கணக்கு, வாஸ்தவத்தில் விஷயத்தைத் தெளிவுபடுத்தவேயிலலை.

    இன்னொரு, கணக்கு, பாஷையை வைத்துச் செய்வது என்று சொன்னேன். பாஷையை வைத்துச் செய்வது என்று சொன்னேன். பாஷையில் மொழி, LH, (script) என்று இரண்டு இருக்கின்றன.

    இப்போது நம் தேசத்தில் இருக்கப்பட்ட லிபிகளுக்கெல்லாம் ஆதிமூலமாக பிராம்மி LH இருக்கிறது. இப்போது பார்த்தால் தமிழ் எழுத்துக்கும், தேவநாகரி (ஸம்ஸ்கிருத) எழுத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கிறது. ஆனால் - பல நூற்றாண்டுகளாக வந்திருக்கிற சாஸனங்களை ஆராய்ச்சி பண்ணிப் பார்த்து, நூற்றாண்டு வாரியாக பிராம்மி லிபியில் ஏற்பட்ட மாறுதல்களுகளுக்கு சார்ட் (chart) போட்டிருக்கிறார்க அதைப் பார்த்தால் மூலமான பிராம்மியிலேயே தான் ஒவ்வொரு காலத்தில் ஒருவிதமான மாறுதல்கள் ஏற்பட்டு, இப்போது பார்த்தால் ஒன்றுக்கொன்று ஸம்பந்தமேயில்லாமல தோன்றும் லிபிகள் எல்லாம் அந்த ஒரே மூலத்திலிருந்து வந்திருக்கின்றன என்று தெரிகிறது.

    இப்போது இருப்பதெல்லாம் பிராம்மியில் மீசை போட்டுக் கொண்ட எழுத்துக்கள், கொம்பு முளைத்த எழுத்துக்கள் என்றுதான் எனக்கு வேடிக்கையாகத் தோன்றும். சார்ட்டைப் பார்த்தால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும். சில சமயங்களிலும் பிராம்மி எழுத்தின் நடுவிலே மீசை மாதிரி ஒன்று சேர்கிறது. தேவநாகரி உ,ஊ எல்லாம் இப்படித்தான் இருக்கின்றன. தமிழ் எழுத்துக்கள் அநேகம் கொம்பு போட்டுக்கொண்டு தோன்றியிருக்கின்ற இம்மாதிரியான ஒவ்வொரு மாறுதலும் ஏற்பட இத்தனை காலம் ஆகிறது என்று நன்றாக நிர்ணயமான சரித்திர காலச் சாஸனங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த அடிப்படையில் கணக்குப் பண்ணியே இதுவரை காலம் தெரியாதிருக்கிற ஒரு சமயத்தைச் சேர்ந்த சாஸனத்தின் லிபியைப் பார்த்து, அது இன்ன காலத்தைச் சேர்ந்தது என்று நிர்ணயம் பண்ணுகிறார்கள்.

    வேதத்தைப் பொறுத்தமட்டில் அதை எங்கேயும் கல்வெட்டில் எழுதிவைக்கவில்லை. ஆனபடியால் லிபியைப் பார்த்து காலநிர்ணயம் பண்ண வேண்டிய பிரச்சனை இல்லை.

    Contd in Part 2…………..

    Source:subadra
Working...
X