நானும் ஸ்ரீசித்தேஸ்வரரை தரிசிக்கணுமே

மேட்டூருக்கு அருகே, நெருஞ்சிப்பேட்டை என்றொரு கிராமம். 1928-ஆம் வருடம் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா.
ஊரின் முக்கியஸ்தரான சுந்தர ரெட்டியாருக்கும் அப்போ தைய எம்.எல்.ஏ. குருமூர்த்திக்கும பெரியவாளிடம் அதீத பக்தியும் அபிமானமும் உண்டு. நினைத்தபோதெல்லாம் ஊர்ப் பெரியவர்களுடன் சென்று, அந்த மனித தெய்வத்தைத் தரிசித்து வருவார்கள். அப்படியிருக்க, அவரே தங்களது கிராமத்துக்கு விஜயம் செய்திருக்கிறார் என்றால், கேட்கவேண்டுமா?!


ஒருநாள் ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர எனும் கோஷம் முழங்க, பெரியவாளைச் சுற்றி அமர்ந்திருந்தனர் ஊர்மக்களும் பக்தர்களும். அப்போது சற்று தூரத்தில், கோவிந்த கோவிந்த எனும் கோஷம் ஒலித்தது. உடனே பெரியவா, இந்த கோவிந்த கோஷம் எங்கேயிருந்து வர்றது? என்று கேட்டாராம்.


பக்கத்திலேயே பாலமலைன்னு ஒரு மலை அதன் உச்சியில், ஸ்ரீசித்தேஸ்வரர் கோயில் இருக்கு. அந்த ஈஸ்வரனை தரிசிக்க மலையேறும் பக்தர்கள், கோவிந்த, கோவிந்தன்னு கோவிந்த நாமாவைச் சொல்லிக்கிட்டுதான மலை ஏறுவார் கள். கிட்டத்தட்ட 12 மைல் துரம்! என்று ஊர்ப் பெரியவர்கள் பதில் சொல்லியிருக்கிறாரகள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsமகா பெரியவாளுக்கு ஏக ஆனந்தம். ஈஸ்வரனைத் தரிசிக்க கோவிந்த கோஷமா?! என்று வியந்து சிலா கித்தவர், நானும் ஸ்ரீசித்தேஸ்வரரை தரிசிக்கணுமே என்று தனது ஆசையைக் கூறினாராம். ஸ்வாமிகளுக்கு 12 மைல் மலையேறுவது கஷ்டம் ஆயிற்றே! என்று பக்தர்களுக்கு தயக்கம். ஆனால், மகா பெரியவரோ தயங்காமல் கிளம்பிவிட்டார்.

நம் எல்லோருக்கும் வழிகாட்டிய அந்த மகானுக்கு, ஸ்ரீசித்தேஸ்வரரைத தரிசிக்க வழிகாட்டுவதற்காக, அன்பர்கள் குழு ஒன்றை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தார் சுந்தர ரெட்டியார்.


மலையில் 12 மைல் தூரம் ஏறிச் சென்று, சுயம்புவான ஸ்ரீசித்தேஸ்வரரைத& தரிசித்த மகா பெரியவர், ஒரு நாள், ஒரேயரு பக்தர், தன் சொந்தச் செலவில் இந்த ஸ்வாமிக்குக் கோயில் கட்டுவார்! என்றாராம். மகா பெரியவரின் அந்த தெய்வ வாக்கு அதன்பின் 62 வருடங்கள் கழித்து, 1990-ல் பலித்தது.


அந்த வருடம் வடநாட்டு சேட்ஜி ஒருவர், ஸ்ரீசித்தேஸ்வரரைத& தரிசிக்க வந்தார். அவருக்கு அந்த ஈஸ்வரன் என்ன ஆணையிட்டாரோ அந்த அன்பரே தனியருவராகக் கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்து முடித்து விட்டார்!Source: suresh