வார நாட்களில் பயணிக்கக்கூடாத திசைகள்.

விளக்கம்

  • இந்துக்களின் நம்பிக்கையின்படி ஒவ்வொரு நாளிலும் பயணம் செய்யக்கூடாத திசைகள் உள்ளன...அந்தக் குறிப்புகளை வாரசூலை என்பர்...அதன்படி திங்கள், சனிக்கிழமைகளில் கிழக்கு திசை,செவ்வாய், புதனில் வடக்கு, வியாழனில் தெற்கு,வெள்ளி, ஞாயிறில் மேற்கு திசைகளில் சூலை இருக்குமாதலால் அந்தந்த நாட்களில் குறிப்பிட்ட திசையில் பயணம் செய்யக்கூடாது...சூலை எனில் நோய் மற்றும் துன்பம் எனப்பொருள்...தவிர்க்கமுடியாதக் காரணங்களால் பயணிக்க நேரிட்டால் திங்கள், சனியில் எட்டு நாழிகை, செவ்வாய், புதனில் பதினொன்று நாழிகை, வியாழன் இருபது நாழிகை, வெள்ளி, ஞாயிறில் பன்னியிரண்டு நாழிகை கழித்து தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்பது விதிவிலக்காகும்...நாழிகை என்பது இருபத்துநான்கு நிமிடங்களாகும்...சூரியோதயத்திலிருந்துதான் இந்துக்களின் கணக்குப்படி நாள் துவங்குகிறது...நடு இரவு பன்னியிரண்டு மணியிலிருந்து அல்ல...ஆகவே நாழிகையை சூரியோதயத்திலிருந்தே கணக்கிடல் வேண்டும்...



http://ta.wiktionary.org/s/43a5

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends