Announcement

Collapse
No announcement yet.

மந்திர யோகமும் மந்திர ஸித்தியும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மந்திர யோகமும் மந்திர ஸித்தியும்

    மந்திர யோகமும் மந்திர ஸித்தியும்

    பதினான்கு உலகங்களும் ஒரு ராஜ்யம். இந்த ராஜ்யத்திற்கு ஒரு சக்ரவர்த்தி. அந்த சக்ரவர்த்திக்கு எல்லா ஜீவராசிகளும் பிரஜைகள். ராஜ்யமும் அநாதி, சக்ரவர்த்தியும் அநாதி. ராஜ்யமும் சக்ரவர்த்தியும் பிரஜைகளும் இருந்தால் அதற்கு ஒரு சட்டம் வேண்டும். இவைகள் எல்லாம் அநாதியாகத்தானே இருக்கணும்?

    அந்த அநாதிச் சட்டமே வேதம். இவற்றில் ராஜ்யமான பிரபஞ்சத்தை "அநாதி"என்றாலும், அவ்வப்போது அதற்கு உற்பத்தி உண்டு;அழிவும் உண்டு. சக்ரவர்த்தியான பரமாத்மாவும், சட்டமான வேதமும் ஸர்வ சாச்வதம்.
    உலகம் உற்பத்தி ஆகிறது, வளர்கிறது, பிரளயம் அடைகிறது. இப்படியே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சக்ரவர்த்தியும் சட்டமும் மாத்திரம் ஸ்திரம். ஒவ்வொரு ஸ்ருஷ்டியின் ஆரம்பித்திலும், அந்த சக்ரவர்த்தி அதிகார புருஷர்களை ஸ்ருஷ்டி செய்கிறான். அந்த அதிகாரிகளுக்கு வேண்டிய யோக சக்தியைக் கொடுக்கிறான். யோக சாஸ்திரத்தில் தன் ச்ரோத்திரத்திற்கு வெளி ஆகாசத்திற்கும் அபேதமான ஒரு ஸாம்யம் (ஸமநிலை) உபதேசிக்கப்பட்டிரக்கிறது. அதை அநுஷ்டிக்கும் போது திவ்ய ச்ரோத்திரத்தைக் கொண்டு வெளி ஆகாசத்தில் ஸ்திரமாய்க் கிடக்கும் அநாதி சப்த அலைகளை ஈசனுடைய அருள் சகாயத்தால் அந்த அதிகார புருஷர்கள் அடைகிறார்கள். அவர்களே முதல் முதலில் வேதத்தை அறிந்தவர்களாகிறாரகள். அவர்களே மந்திரங்களுக்குக்ன மஹரிஷிகள்.

    வேதாத்யயனம் ஒரு மந்திர யோகம். ஒவ்வொரு நாடி அசைவதினால் சித்தத்திற்கு ஒவ்வொரு விதமான விகாரங்கள் ஏற்படுகிறது. சில நாடி அசைவுகளால் காம விகாரங்களும், சில நாடிகளால் சோம்பல் விகாரங்களும், சில நாடிகளால் கோப விகாரங்களும் உண்டாகின்றன. இதை மாற்றிச் சொன்னால், காம விகாரம் ஏற்படும்போது சில நாடிகளில் அசைவும் உண்டாகின்றன. இவை பிரத்யக்ஷமாகவே அநுபவத்தில் காணப்படுகின்றன. சாந்தம் ஏற்படும்போது முகத்தில் ஒரு களை உண்டாகிறது. அந்தக் களை சில நாடிகள் குளிர்ந்ததன் பலனேயாம். இப்படியே காமம், குரோதம் ஒவ்வொன்றும், 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்'என்றபடி முகத்திலேயே பிரதிபலிக்கின்றன. நாடி சலனம்தான் இந்த அடையாளங்களை உண்டாக்குவது. இவ்விதம் மனோவிகாரங்களால் நாடிகளில் சில விகாரங்கள் ஏற்படுவதால், அந்த நாடிகளை வசப்படுத்தி விட்டால், காமக் குரோதங்களையோ, சாரத்தையோ நமது இஷ்டப்படி வரவழைத்துக் கொள்ளலாம். அதற்கு வெளிப் பொருள்கள் தேவையில்லை.

    இப்படி நாடிகளை ஸ்வாதீனப்படுத்த ப்ராணாயாமத்தை முக்கியமாகக் கொண்ட ராஜயோகம் ஒரு மார்க்கம். அதே விதமாய் மந்திரயோகம் ஒரு மார்க்கம். ஒரு எழுத்தை நாம் உச்சரிக்கும்போது நமது நாக்கு, உதடு, மேல்வாய், கீழ்வாய்,கண்டம் முதலியவைகளின் இடைவெளி வழியாக ப்ராணவாயு வெளிப்படுகிறது. அப்பொழுதுதான் அக்ஷர த்வனி உண்டாகிறது. அந்த அக்ஷர த்வனிக்கு காரணமாக எந்தெந்த உறுப்புகளில் ப்ராணவாயு ஸஞ்சரிக்கிறதோ அந்தந்த இடம் ஸம்பந்தப்படும் நாடிகளில் ஸலனம் ஏற்படுகிது. நாடிகளில் சலனத்தினால் மனஸில் எந்த விதமான விருத்திகள் ஏற்பட்டு இகலோக க்ஷேமமும் பர லோக க்ஷேமமாகிய மோக்ஷம் முதலிய புண்யமும் ஏற்பட வேண்டுமோ, அதற்கு அநுகுணமாக உள்ள உச்சாரணங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, வேறுவிதமான உச்சாரணங்களை விலக்கி அமைந்தனவே வேத மந்திரங்கள்.

    மந்திரத்துக்கு Definition (லக்ஷணம்) "மனனாத் த்ராயதே"என்று சொல்லியிருக்கிறது. அதாவது திரும்பத் திரும்ப மனனம் செய்து உருப்போடுவதால் காப்பாற்றுவதே மந்திரம். அவைகளின் ஆவ்ருத்தியால் எந்தெந்த நாடிகளில் திருப்பித்திருப்ப சலனம் ஏற்பட்டு ஆத்மக்ஷேமம் கிட்டுமோ, அந்த க்ஷேமத்தைத் தானும் அடைந்து, தன் மந்திர சக்தியால் உலகத்தோரும் க்ஷேமம் அடையச் செய்வதே வேதியரின் பிறவிக் கடமை.

    மந்திரங்களில் ஸித்தி பெற்றுப் பூரண பலனைப் பெற வேண்டுமானால் அவற்றை எப்படி ஒத வேண்டும் என்று ('சிக்ஷ' சாஸ்திரத்தில்) சொல்லியிருக்கிறது:

    சீக்ரி சிர : கம்பீ ததா லிகித பாடக :|
    அனர்த்தக்ஞ : அல்பகண்டச்ச ஷடைதே பாடகாதமா :|

    "இப்படி யெல்லாம் வேதத்தைத் தப்பாகப் பயிலபவர்கள் அதமர்கள்" என்று சொல்லி, இந்த ச்லோகத்தில் ஆறு தினுசான தப்புகளைச் சொல்லியிருக்கிறது. "கீதி"என்றால் வேதத்தை பாட்டு (கீதம்) மாதிரி இஷ்டப்படி ராகம் போட்டுப் பாடுகிறவன். இப்படிப் பண்ணக்கூடாது. வேதத்துக்கே உரிய ஸ்வரத்தில்தான் அதைச் சொல்ல வேண்டும். "சீக்ரி" என்றால் வேகமாகச் சொல்லிச் சீக்கிரத்தில் முடிப்பவன். இதுவும் பிசகு. வேத அக்ஷரங்களை அவற்றின் காலப் பிரமாணப்படி சொன்னால்தான் பூர்ண பலன் உண்டாகும். "சிர:கம்பீ"என்றால் தலையை ஆட்டிக்கொண்டு சொல்கிறவன். ஆடாமல் ஸமநிலையில் உட்கார்ந்து கொண்டு, மந்திரங்களால் தானாக ஏற்படும் நாடி சலனங்களைத்தான் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். பாட்டுப் பாடுகிறவர் மாதிரி சிரஃகம்பம் பண்ணினால் நாடி சலனம் வித்யாஸப்படும். 'லிகித பாடகன்' என்றால் எழுதி வைத்துக் கொண்டு படிப்பவன். இது தப்பு. வாயால் சொல்லிக் காதால் கேட்டே பாடம் பண்ண வேண்டும் என்று முன்பே சொன்னேன். 'அனர்த்தக்ஞ:'என்றால அர்த்தம் தெரியாதவன். அர்த்தம் தெரிந்து கொண்டுதான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

    Source:subadra
Working...
X