அன்னதானம் என்பது உணவற்ற ஏழைகளுக்கும்,வரியோருக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம் ஆகும்.பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.நோய்களில் கடுமையானது பசி ஆகும்.பசி வந்தால் ஒருவன் தன்னிலை இழப்பான்.

மனித மனமே எதிலும் முழுமையாக திருப்தியடையாது.மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்ததிற்கு ஏங்கும்.பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.

உலகத்தில் சிறந்த பரிகாரங்களுள் ஒன்று மனித மனத்தை குளிர்விப்பது ஆகும்.ஒருவருக்கு பொன்னாலும்,பணத்திலானாலும் திருப்தி படுத்த முடியாவிட்டாலும் நாம் உணவு அளிக்கும்போது அவர் மனதை திருப்திபடுத்திவிடலாம்.அதனால்தான் அன்னதானம் செய்வது மிகப்பெரிய தர்மம் ஆகும்.

சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன, ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்த போது தேவர்கள் அவனிடம், கர்ணா... நீ பூமியில் இருந்த போது பொன்னும், மணியுமே தானம் செய்தாய், அன்னதானம் செய்யவில்லை.

ஏகப்பட்ட தர்மங்கள் செய்த கர்ணனே அன்னதானம் செய்யாமல் போனதால் சொர்க்கத்தில் கஷ்டபட்டதாக சாஸ்திரம் கூறுகிறது.நாம் செய்யாமல் இருக்கலாமா?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.