வேதம் - தேவகுல - மனிதகுல பரஸ்பர சகாயம் -Part 1

இப்படிப்பட்ட யக்ஞமானது நம் வேத மதத்துக்கே முக்கியமானதாக உள்ளது. கீதையிலே பகவான் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார& ஆதியில் பிரம்மா மநுஷ்யர்களை சிருஷ்டித்தபோதே அவர்களுக்கான இந்த யக்ஞங்களையும் உண்டாக்கி விட்டாராம். " யக்ஞங்களைப் பண்ணிக் கொண்டு வாழுங்கள். இதனால் சகல நன்மைகளையும் பெற்று வாழுங்கள். நீங்கள் விரும்பியதையெல்லா கொடுக்கிற காமதேனுவாக இந்த யக்ஞங்கள் இருக்கட்டும்" என்று மநுஷ்யர்களுக்கு பிரம்மா ஆக்ஞை செய்து விட்டார் - என்று கீதையில் ( iii.10 ) சொல்லியிருக்கிறது.

ஸஹ யஜ்ஞா : ப்ரஜா ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி :|
அனேன ப்ரஸவிஷ்யத்வம் ஏஷ வோ அ து இஷ்டகாமதுக் :|

'பிரஜைகளோடு யக்ஞங்களை சிருஷ்டித்தார்' என்றால் முதலில் மனிதர்களையும் அப்புறம் வேள்விகளையும் உண்டு பண்ணினார் என்று அர்த்தமாகலாம். ஆனால் இங்கே, " யக்ஞங்களோடு பிரஜைகளை உண்டாக்கினார் (ஸஹயஜ்ஞா : ப்ரஜா : ஸ்ருஷ்ட்வா) என்பதாக முதலில் யக்ஞத்தைச் சொல்லி, அப்புறம் மநுஷ்ய இனத்தைச் சொல்லியிருக்கிறது !
சிருஷ்டிக்கே மூலம் வேத மந்திரங்கள்தான். அந்த வேத மந்திரங்களைச் சொன்னாலே சிருஷ்டியில் பலவித அதிகாரங்களைப் பெற்றிருக்கும் தேவ சக்திகளை அந்த sound vibration- கள் (ஒலி அதிர்வுகள்) பிடித்துக் கொண்டு வரும்.

யக்ஞத்தில் இப்படிப்பட்ட மந்திரங்களைச் சொல்வது கடிதத்தில் அட்ரஸ் எழுதுகிறமாதிரி. இப்படி அட்ரஸ் பண்ணி ஹோமம் செய்தால்தான் ஆஹதியை அக்னி தேவர்களிடம் சேர்க்கிறார்.

மிருகங்களில் பூனையைவிட நாய், நாயைவிடகுதிரை, குதிரையைவிட யானை, யானையைவிடச் சிங்கம் என்று ஒன்றைக் காட்டிலும் இன்னொன்று அதிக சக்தி உடையதாக இருக்கிறதல்லவா? இப்படியே சிருஷ்டியில் மநுஷ்யர்களைவிட அதிக சக்தி உடையவர்களும் இருக்கிறார்கள். அவர்களையே தேவர்கள் என்பது. அவர்கள் இந்த லோகத்தில் பஞ்ச பூதங்களில் கரைந்து இருப்பதோடு, கண்ணுக்குத் தெரிகிற ரூபத்தில் தேவலோகத்தில் இருந்துகொண்டிருக்றார்கள். மந்திரங்களை நன்றாக ஜபித்து ஸித்தி அடைந்தால், ஸுக்ஷ்ம ரூபத்தினால் அவர்கள் செய்கிற அநுக்ரஹங்களைப் பெறுவதோடு, தேவ லோகத்தில் அவர்களுக்கு உள்ள ஸ்தூல ரூபங்களையும் தரிசனம் பண்ணலாம். இந்த மந்திரங்களுக்கு ஆதாரமான மூல சப்த சலனங்களால்தான் அவர்கள் பரமாத்மாவில் தோன்றியது. எனவே இதையே திருப்பிச் சொல்வதானால் மந்திரங்களை தேவதைகளின் சப்த ரூபம் என்று சொல்லலாம்.

யக்ஞத்தில் ஒவ்வொரு தேவதை பற்றியும் மந்திரம் சொன்னால் அந்த தேவதை அங்கு ஆவிர்பாவமாகிறது. நல்ல பக்குவிகளுக்கு இது பிரத்யக்ஷமாகவே தெரியும். தெரியா விட்டாலும் அந்த தேவதா சக்தி அங்கு ஸக்ஷ்மமாக வெளிப்பட்டிருக்கு ஆனாலும், நேரே அதற்கு ஆஹதி தரக்கூடாது. பத்திரம் எழுதினால், Bond எழுதினால் அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும், ரிஜிஸ்திரார் முத்திரை போடவேண்டும் என்றெல்லாம் இருப்பது போல் வேதத்தில் சொல்லியிருக்கிற விதிகளின்படி அக்னியில் போட்டால்தான் அது அவர்களுக்கு எந்த விதத்தில் ஏற்கத்தக்கதோ அந்த விதத்தில் போய்ச் சேரும்.

'அக்னி எரிந்துவிட்டதே, மிஞ்சியதை யக்ஞ சிஷ்டமாக (பிரஸாதமாக) யாகம் பண்ணிநவர்களே சாப்பிட்டுவிட்டாரகளே, அது எப்படி தேவர்களை அடைய முடியும் ?' என்று ஸந்தேஹப்படக் கூடாது. தேவர்கள் நம் மாதிரி பாஞ்ச பௌதிகமான (பஞ்சபூத மயமான) சரீரம் படைத்தவர்களலல்ல. எனவே நமக்குள்ள மாதிரி ஸ்தூலமான ஆஹாரம் அவர்களுக்குத் தேவை இல்லை. நமக்குங்கூட ஆஹாரங்களை வயிற்றிலுள்ள ஜாடராக்னி எரித்து, அதன் ஸத்தை மட்டும்தானே ரத்தமாக்கி அனுப்புகிறது. இப்படியே யக்ஞ அக்னியானது ஆஹதிகளின் ஸக்ஷ்மமான ஸாரத்தை தேவர்களுக்கு அனுப்புகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Contd.in Part 2
Source:subadra