Announcement

Collapse
No announcement yet.

வேதம் -தேவகுல - மனிதகுல பரஸ்பர சகாயம் -Part 3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் -தேவகுல - மனிதகுல பரஸ்பர சகாயம் -Part 3

    வேதம் -தேவகுல - மனிதகுல பரஸ்பர சகாயம் -Part 3

    இதனால் வெள்ளைக்காரர்கள் பெரிய யுக்தி செய்தார்கள். மெஷின்களை வைத்துச் செய்கிற ஆலைத் தொழில்களில் மற்ற தேசங்களையும் இழுத்து விட்டுவிட்டு - தங்களுடைய கரிக்கட்டியையும் வெள்ளைக்கட்டியையு அங்கெல்லாம் விலை போகும்படியாக வியாபார ஸாமர்த்தியம் செய்தார்கள். விலையாகத் தானியம், தனம், பருத்தி என்றிப்படி எல்லாவற்றையும் யதேஷ்டமாகப் பெற்றார்கள். தேசம் தேசமாகத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்துவிட்டார்கள்.

    தேவலோகத்தில் வயல் கிடையாது. தேவர்களுக்குச் சாப்பாட்டுக்கு வழி இல்லை.

    துர்பிக்ஷம் தேவலோகேஷமநூநாம் உதகம் க்ருஹே

    என்று வேதத்திலேயே (தைத்திரீய ஆரண்யக முதல் ப்ரச்னத்தில் ) சொல்லியிருக்கிறது. மேல் மட்டத்தில் இருக்கிற மேகங்கள் மழையாக பூமியில் பெய்து, பூலோகத்தில்தான் ஜலம் ஆறு, ஏரி, கிணறு என்று எடுத்துப் பிரயோஜனப்படுத்திககொள்ளும்படி இருக்கிறது. உதகம் (ஜலம்) நம் லோகத்து மநுஷ்யனின் கிருஹத்தில்தான் உண்டு. ஜலத்தைக் கொண்டு பயிர் பண்ணி ஸுபிக்ஷம் அடைவது பூலோகத்தில்தான். வயல் இல்லாத தேவலோகத்தில் துர்பிக்ஷம்தான். இப்படி அந்த வேதவாக்கியம் சொல்கிறது. ஆனால், மேலேயிருக்கிற மேகம் நமக்கு ஜலமாக வரவேண்டுமானால், அது தேவர்களின் அநுக்ரஹத்தாலேயே நடக்கும். நாம் யக்ஞம் செய்தால்தான் அவர்கள் அந்த அநுக்ரஹத்தை செய்வார்கள். இல்லாவிட்டால் மழை பெய்யாது. பஞ்சம்தாந் வரும். பூமியில் பெய்யாமல் ஸமுத்திரத்திலேயே எல்லா மழையும் பெய்துவிடும். அல்லது, பயிரெல்லாம் அழுகி அடித்துக் கொண்டு போகும்படி பேய்மழையாகப் பெய்யும். ஒன்று அதிவ்ருஷ்டி- அளவுக்கு மீறிப் பெய்து வெள்ளத்தில் பயிர்நாசமாவது. இன்னொன்று அநாவ்ருஷ்டி-மழையே பெய்யாமல் பஞ்சம் ஏற்படுவது. இந்த இரண்டும் ஏற்படாமல், ஸுபிக்ஷத்துக்கு உரிய மழையை அளவாக அனுப்பி வைக்கிற சக்தி தேவலோகவாஸிகளுக்கே இருக்கிறது.

    இங்கிலீஷ் தேசத்தில், வயல் இல்லாவிட்டாலும் நிலக்கரி இருப்பதுபோல, தேவர்களிடம் தாங்களே பயிர் பண்ணிக் கொள்ள முடியாவிட்டாலும், அநுக்ரஹ சக்தி என்ற சரக்கு இருக்கிறது. அந்த அநுக்ரஹ சக்தியை வைத்துக் கொண்டு, அவர்கள் சாப்பிட்டுக்கு வேண்டிய மழையை அனுப்ப முடியும். அவர்களுக்கு இப்படிப்பட்ட அநுக்ரஹ சக்தியை நாமே வேத மந்திரங்களால் விருத்தி பண்ணுகிறோம். அந்த மந்திரங்களோடு செய்கிற ஹோமம், அவர்களுக்கு ஆஹாரமாகிறது.

    நம்மூரில் பருத்தி விளைகிறது. இங்கே நூற்பு ஆலைகள் விருத்தியாகாதபோது நம்மூர்ப் பருத்தியை வெள்ளைக்காரன் லங்காஷயருக்கு எடுத்துக் கொண்டு போய், ' நைஸ் ' துணியாக்கி நம் தலையிலேயே நாலு மடங்கு விலை வைத்துக் கட்டினான். தேவர்கள் நம் லோகத்து ஸமுத்ரதிலிருந்து ஆவியாகி மேலே போகிற மேகத்தையேதான் நமக்கு மழையாகத் திருப்பி அனுப்புகிறார்கள். ஆனால், வெள்ளைக்காரன் செய்த மாதிரிக் கொள்ளை லாபம் அடிக்காமல், நாம் செய்வதற்கு அதிகமாகவே திருப்பி அநுக்ரஹம் பண்ணுவார்கள். ஆனாலும் நாம் அவர்களுக்குக் கொடுத்தால்தான், திரும்ப நாலு மடங்காக நமக்கு நல்லது செய்வார்கள். நம்மைவிட அவர்களுக்குக் கொடுத்தால்தான், திரும்ப நாலு மடங்காக நமக்கு நல்லது செய்வார்கள். நம்மைவிட அவர்களுக்குச் சக்தி அதிகம்.

    ஆனாலும் பகவான் யக்ஞ கர்மாநுஷ்டானத்தை நமக்கே கொடுத்து, நாம் செய்கிற கர்மாநுஷ்டானத்திலயே அவர்கள் திருப்திப்படும்படயாக வைத்து, நம்மையும் அவர்களுடைய ஸ்தானத்துக்கே உயர்த்தி விட்டது போல வைத்திருக்கிறார். அதனால்தான், ' பரஸ்பரம் பாவயந்த :' என்று தட்டிக் கொடுத்துப் பேசுகிறார்.
    Source:subadra
Working...
X