நம்மவீட்டு கல்யாணங்களிள் சில பல சுவையான நிகழ்ச்கிக்கள் நடைபெருகின்றன.அவற்றில் சிலதை
நாம் பார்போம்.

சீன் 1.
பிள்ளையின் மாமா மனைவியிடம்: ஏண்டி பாத்ரூம் உள்ளே போயிருக்கேன். கதவை போட்டுண்டு வந்துட்டே? இத்தனை நாழி கதவை தட்டிண்டிருந்தேன்.
மாமி: ஐயையோ சாரின்னா நான் கவனிக்கலை.
மாமா: ஆமாம் நான் இல்லைன்னு நீ என்னிக்காவது கவனிச்சாதானே?
( வடக்கேகல்யாணத்திலேமாப்பிள்ளையோடசெருப்பைதான்ஒளிச்சுவெப்பா. இங்கேமாப்பிள்ளைக்குமாமாவையேஒளிச்சுவைக்கறாபோலிருக்கு!!)

சீன் 2.
ஒரு அத்தை பெண் (ஒ அ பெ): பொண்ணுக்கு என்ன பண்றா? புள்ளை ஆத்துலே ஏதானும் demand உண்டா?
இன்னொருத்தி: ஒண்ணுமே வேண்டாமாம். சேவை நாழி மாத்ரம் கேட்டாளாம். பிள்ளைக்கு சேவை ரொம்ப பிடிக்குமாம்.
ஒ அ பெ : போச்சுடா. சேவை யார் பிழியறது. ஒரு 5 பவுன் கூட வேணா போட்டுடலாம்.

சீன் 3
தங்கை என்னிடம்: கார் சாவியை எங்கே வெச்சு தொலைச்சே?
நான்: உன் பைலேதான் போட்டிருப்பேன் சரியா பாரு.
தங்கை: காணுமே.
ஒரு சித்தப்பா பெண்: என்ன காணும்?
தங்கை: என் கார் சாவி. இவ எங்கயோ வெச்சுத் தொலைச்சுட்டா.
அடுத்த 10 நிமிடத்தில் நான் போன இடமெல்லாம்:
'சாவி கெடைச்சுதா?'
"எங்கே தொலைச்சே?'
"வேறே என்ன காணும்?'
'நீ கொஞ்சம் நிதானமா இருக்கணும். ஆனாலும் பரபரப்பு.'
நேரம்தான்.
போதாக்குறைக்கு செருப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு 8-10 வயது நண்டு சொல்கிறது:
"பெரியம்மாவுக்கு இதே வேலையா போச்சு. எதையானும் தொலைக்கிறது. அப்புறம் அதை தேடறது."
தேவையா?

சீன் 4
பெண்ணின் அம்மா: பச்சப்படி எல்லாம் சுத்தி ஆச்சு. வாத்யார் எங்கே? அவர்தான் எப்படி உள்ளே கூப்டுண்டு போகணும்னு வந்து சொல்லணும்.
தங்கை: அவர் என்கிட்டே சொல்லிட்டு போனார்: "நீங்க ஊஞ்சல் பச்சப்படி முடிச்சு மேடைக்கு பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிண்டு வந்துடுங்கோ. நான் கொஞ்சம் சாப்டுட்டு வரேன். எனக்கு low sugar ஆயிடும்" அப்படீன்னு சொல்லிட்டு போனார்.
(இதுஎப்படிஇருக்கு!இந்தநாள்லேயாரையும்நம்பமுடியலைசார்!!)

சீன் 5
வீட்டு பெரிசு ஒண்ணு: ஏண்டி உஷா, தாலி கட்டினதும் ஜூஸ் ஒண்ணு கொடுப்பாளே. ஒண்ணும் காணுமே.
நான்: அதோ பாருங்கோ அந்த மூலைலே நின்னுண்டு ஒருத்தன் குடுத்திண்டிருக்கான். வாங்கோ
அங்கே போனால் ஜூஸ் ஓவர்.
பெரிசு: நாக்கெல்லாம் வறண்டு போச்சு கொஞ்சம் தாராளமா கலக்கப்படாதோ. arrangements போறாது.
நான்: ஷூ வாய மூடுங்கோ, நாம்தான் பொண் ஆத்துக்காரா. யாரை போய் குத்தம் சொல்றது?
இந்தபெருசுங்கதொல்லைஆனாலும்தாங்கலைபா.

சீன் 6
காலையிலிருந்து பாண்டில் அலைந்து கொண்டிருந்த சித்தி பையனிடம் நான்: ஏன் வேஷ்டி எடுத்துண்டு வரலியா?
சித்தி பிள்ளை: எனக்கு இவா வேஷ்டி வெச்சு குடுப்பானு நான் எடுத்துண்டு வரலை. இவா எனக்கு வேஷ்டியே குடுக்கலை.
போச்சுடா. வாயைமூடிண்டுஇருந்திருக்கணும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒரு கல்யானத்தில் நாங்கு பேர் உரவினர்களுக்கு பக்ஷணம் கொடுப்பததை ஏற்றுக்கொண்டார்கலள். ஒரு சொந்தகார மாமிக்கு ஒருவர் பக்ஷணம் கொடுத்தார். அதே மாமி இன்னொருவரிடம் மருபடியும் பக்ஷண்ம் வாங்கிகொண்டுஇருந்தார். கொஞ்ச நேரம் பொருத்து பார்ரத்தால் அந்த மாமி நாலு பேரிடமும்
நாலு பேக்கட் வாங்கிகொண்டு போனது தெரியவந்தது.. சம்ப ந்தியை விட அந்த மாமிக்கு தான் அதிகம்
பக்ஷணம் போயிருக்கும் போல தெரிகிரது. இதெர்க்கெல்லாமா செக்யூரிடி போட முடியும்

எங்கள் வீட்டு லகல்யாணத்திர்க்கு வந்த ஒரு மாமா தனக்கு வயிரே சரி இல்லை செத்ததூங்கினால் சரியாபூடும் என்று சொல்லி கிலம்பினார்.நாங்களும் அவரை தொந்தரவு செய்யவேனண்டாம் எ ந்று இருந்து விட்டோம்..கொ ஞ்ச நேரம் பொருத்து சமையல் அறைக்கு போனால் அங்கே அவர் 5/6 தயிர்
வடையை உள்ளே தள்ளிக்கொண்டுஇருந்தார். அவரை என்ன கேட்பது. இப்படியும் சிலர்.


originally posted by Usha and Friends.