சென்னை: சென்னை நகரில் திறக்கப்பட்டுள்ள மலிவு விலையிலான 200 அம்மா உணவகங்கள் மூலம் ஒரே நாளில் 2.73 லட்சம் இட்லிகள் விற்பனையாகி இருக்கின்றன. சென்னை நகரில் ஏழை தொழிலாளர்களுக்காக காலையில் ஒரு இட்லி ரூ1க்கும் பிற்பகலில் ரூ5க்கு சாம்பார் மற்றும் ரூ3 க்கு தயிர் சாதமும் விற்பனை செய்யக்கூடிய அம்மா உணவகங்கள் முதலில் 15 திறக்கப்பட்டன. பின்னர் மேலும் 58 உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரித்தது. இதனால் சென்னை நகரில் நேற்று மட்டும் ஒரே நாளில் 127 இடங்களில் அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன் சிங் மூலம் திறந்து வைத்தார். இதன் மூலமாக மொத்தமாக சென்னை நகரில் 200 உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இந்த 200 உணவகங்கள் ஒவ்வொன்றிலும் தலா 1700 இட்லிகள் விற்பனையாகின்றன. காலை 7 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் இவை அனைத்தும் விற்பனையாகி விடுகின்றன. அதாவது ஒருநாளைக்கு 200 உணவகங்களிலும் மொத்தம் 2.73 லட்சம் இட்லிகள் விற்பனையாகின்றன.

இதேபோல் 62,500 தட்டு சாம்பார் சாதமும், 34,500 தட்டு தயிர் சாதமும் விற்பனையாகின்றன. இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்கள் மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் சம்பாதிக்கின்றனர். .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends