Announcement

Collapse
No announcement yet.

அபசகுனம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அபசகுனம்

    அபசகுனம்



    அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார் .அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.

    ஓடிய பூனை நின்றது.கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.வியப்படைந்த அந்தணர், ''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார் சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.

    பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள்.அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.

    http://www.friendstamilchat.com/foru...=11418.65;wap2
Working...
X