உபதேசம்

ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் பிரஜாபதி (பிரம்மா)இடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த த த என்ற இடியின் ஒலியாக கூறி அருளினார்.


த என்பதை தேவர்கள், தாம்யத என பொருள் கொண்டனர் அப்பதத்துக்கு புலன்களை கட்டுப்படுத்துங்கள் என்று அர்த்தம்


தேவர்கள் புலனின்பம் துயிப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால், தங்களுக்கு இந்த உபதேசம் எனக்கொண்டனர்


மானுடரோ த என்பதை தத்த என பொருள் கொண்டனர். தத்த என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் த என்பதை தயத்வம் அதாவது தயையுடன் இருங்கள் என பொருள் கொண்டனர்.


ஆதி சங்கரர் இதற்கு உரை எழுதுகையில் மானுடரிலேயே தெய்வீக குணமும் அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை என தெளிவு செய்துள்ளார்.


நன்றி கல்கி 09.01.2011 இதழ் ஸ்ரீ ரா. கணபதி அவர்கள்.