கடந்த 26-09-2012 அன்று பிராமின் டுடே இதழின் சார்பில் நடந்த கலப்பு திருமணம் பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் நானும் கலந்துக் கொண்டேன். கலப்பு திருமணத்திற்கு எதிராக பலர் பேசியிருந்தாலும் கலப்பு திருமணத்தை ஆதரித்து பேசிய சிலரின் கருத்துக்களும் சிந்தனையை தூண்டுவதாக அமைந்ததை மறுப்பதற்கில்லை. சந்தியாவந்தனம் செய்ய சொல்லி தமது பிள்ளை குழந்தைகளை வற்புறுத்தும் நம் குல பெற்றோர்கள் பெண் களை மட்டும் சுலோகங்களை சொல்ல சொல்லியோ பூஜை புனஸ்காரங்களை செய்ய சொல்லியோ வற்புறுத்துவது கிடையாது. இது மட்டுமின்றி பெண்ணோ, பிள்ளையோ அவர்களது இளவயது ஆசா பாசங்களை உணராது அவர்கள் மூலம் வரும் வருமானத்திலேயே குறியாய் இருப்பது சிலரது வழக்கமாய் இருப்பதும் வாடிக்கையும் ஆகிவிடுகிறது. நமது ஜாதி பெண்கள் குறிப்பாக I.T Company- களில் வேலை பார்க்கும் பெண்கள் எவ்வித முன் யோசனை யும் இன்றி பிற ஜாதி பையன்களிடம் ஈர்க்கப்பட்டு பெற்றோர்களின் விருப்புக்கு மாறாக தம் வாழ்க்கையை அமைத்து கொண்டுவிடுகின்றனர். இதை தடுக்க எவராலும் முடிவதில்லை. இதனால் நம் சமூக பையன்கள் நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தும் நல்ல வேலையில் இருந்தும் திருமண வாழ்க்கை அமையாமல் வாடுகின்றனர். இந்த சூழலில் 30 அல்லது 35 வயதை தாண்டிய நம் பையன்களுக்கு எந்த காலத்தில் திருமணம் நடப்பது? அதிலும் மிக குறைந்த வருவாய் பெறும் வயது முதிர்ந்த பிராமண பையன்களுக்கு கல்யாணம் என்பதே கனவாகிவிடும் காலம் உருவாகி வருவதை மறுக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலில் வயது முதிர்ந்த நமது பையன்கள் நமக்கு ஒத்துவரக்கூடிய பிற இன பெண்களை மணம் முடித்து அந்த பெண்களையும் பிராமணர் களாக்கி விடுதல் ஏற்புடையதாகும் என கருதுகிறேன். இதனை நம் சமூக பெரிய வர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.பூவணூர்.சுந்தர.ஜானகிராமன்
கொளத்தூர், சென்னை.99


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends