Announcement

Collapse
No announcement yet.

கொடுக்கிற மனசு வேணும்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கொடுக்கிற மனசு வேணும்!

    ஒரு கிராமத்தில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார் துறவி. "உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும், ஏழைகளுக்கு வாரி வழங்க வேண்டும்' என்றெல்லாம் போதனை செய்தார்.
    அவ்வூரில் கஞ்சப்பிரபு ஒருவர் வசித்தார். ஏழைகள் என்றால் அவருக்கு வேப்பங்காய். ஆனால், அவருக்கு துறவியை மிகவும் பிடித்து விட்டது. அவருக்கு ஏதாவது காணிக்கை கொடுத்தாக வேண்டுமென்ற ஆசையுடன் ஆயிரம் ரூபாய் கட்டுடன் வந்தார்.
    ""சுவாமி! இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
    ""சரி...அப்படியானால், இங்கே அமர்ந்திருக்கும் நூறு ஏழைகளுக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடு,'' என உத்தரவிட்டார் துறவி.
    ""ஐயையோ! அதுமட்டும் மாட்டேன்! இதை இந்தப் பிச்øŒக்கார ஜென்மங்களுக்காகவா கொண்டு வந்தேன்! இவர்கள் என்னிடம் கைகட்டி சேவகம் செய்பவர்கள். இவர்களுக்கு கொடுக்க மாட்டேன்,'' என அடித்துச் சொல்லிவிட்டார்.
    துறவி அவரிடம்,""நீ படுபாவி! உன் பணத்தை கையால் தொடுவதும் பாவம், ஏழைகளுக்கு உதவாத உன் பணம் உனக்கும் உதவாமல் போகட்டும்,'' என சாபமிட்டார்.சில ஆண்டுகள் கழித்து அந்த சாபம் பலித்தே விட்டது.
    கொள்ளைக்காரர்கள் சிலர் பிரபுவின் வீட்டுக்குள் புகுந்து அவரது கை, காலை வெட்டி விட்டு பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். எல்லாம் இழந்து, அந்த கிராமத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

  • #2
    Re: கொடுக்கிற மனசு வேணும்!

    கோபத்தை துறவாத துறவி இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கவேண்டாம்

    Comment


    • #3
      Re: கொடுக்கிற மனசு வேணும்!

      இதை எப்படி பெரிய தண்டனை என்று கூறமுடியும். அப்படி இல்லை
      என்றால் அந்த துறவி என்ன செய்திருக்கவேண்டும் என்று நீர்
      நினைக்கிறீர்.

      Comment


      • #4
        Re: கொடுக்கிற மனசு வேணும்!

        ஶ்ரீ
        துறவிகள் முற்றும் துறந்தவர்கள் பெரும்பாலானவர் சாந்தசொரூபிகள் அப்படியிருக்க அந்த கஞ்சப்பிரபு தன் தவறை உணர்ந்து திருந்த ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாமே என்பது தான் எனது ஆதங்கம்

        Comment


        • #5
          Re: கொடுக்கிற மனசு வேணும்!

          என்ன ஸ்வாமின் நீர். அந்த கஞ்ச பிரபுவுக்கு ஏழைகள் என்றாலே வேப்பங்காய் .மேலும் அவர்கள் எல்லோரும் பிச்சைகார ஜென்மங்கள் என்றும் அவரிடம் சேவகம் செய்பவர்கள் என்றும் எண்ணம்..எந்த வாய்ப்பு கொடுத்தாலும் அவர் திருந்தபோவதில்லை .அதை கருத்தில் கொண்டுதான் சாபமிட்டார்.தவறு ஏதுமில்லை.

          Comment

          Working...
          X