வேதம் - ரிக்-யஜுஸ்-ஸாமம்-அதர்வம் Part 1

"அனந்தா வை வேதா:" - வேதங்கள் எண்ணிறந்தவை என்றாலும், ரிஷிகள் சிலவற்றைத்தான் நமக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய இஹ, பர நலனுக்கும் லோக க்ஷேமத்துக்கும் இதுவே போதும். அத்தனை வேதங்களையும் நாம் தெரிந்துகொண்டு பிரம்மா மாதிரிப் பிரபஞ்சங்களை சிருஷ்டிக்க வேண்டுமா என்ன ? சிருஷ்டியாகிவிட்ட இந்த லோகம் நன்றாக இருக்கச் செய்வதற்கான அளவுக்கு நமக்கு வேதங்கள் தெரிந்தாலே போதும். இப்படிப் பல வேதங்களை ரிஷிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். நாலு வேதம் என்று சொல்கிறோம். ஆனால் இது ஒவ்வொன்றிலும் பலவிதமான பாடங்கள், பாட பேதங்கள் உண்டு. பாடாந்தரம் என்று இதைச் சொல்வார்கள். ஒரே கீர்த்தனமானாலும், ஒரே ராகமானாலும் அதிலே மஹா வைத்யயநாதய்யர் பாணி, கோனேரிராஜபுரம் பாணி, சரப சாஸ்திரி பாணி என்று வெவ்வேறு தினுசு இருக்கிறது. சில பாணியில் அதிகம் சங்கதிகள் பாடுகிற மாதிரி, சில ஸக்தங்கள் ஒரு பாடத்தில் அதிகம் இருக்கும். ஒன்றுக்கொன்று மந்திரங்கள் முன்பின்னாக இருக்கும்.

இந்த பாடாந்தரம் ஒவ்வொன்றையும் ஒரு சாகை என்று சொல்வார்கள். சாகை என்றால் கிளை. வேத விருக்ஷத்தில் இவை ஒவ்வொன்றும் ஒரு கிளை. அநேக கிளைகளுடன் கப்பும் கவடும் விட்டுக்கொண்டு ஒரு மஹா விருக்ஷம் மாதிரி, அடையாறு ஆலமரம் மாதிரி, வேதம் இருக்கிறது. இத்தனை சாகைகள் இருந்தாலும், இவற்றை ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற நாலில் ஒன்றை சேர்ந்ததாகவே பிரித்திருக்கிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇப்போது ஆராய்ச்சியாளர்கள் ரிக்வேதம் முந்தியது. யஜுர்வேதம் பிந்தையது எந்றெல்லாம் சொன்னாலும், சாஸ்திரப்படி எல்லாம் அனாதிதான். சிருஷ்டித் தொடக்கத்திலேயே பிரம்மாவால் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டதான யக்ஞத்தில் நாலு வேதங்களுமே பிரயோஜனமாகின்றன என்பதைப் பார்க்கும்போது, இந்த முந்தி பிந்தி ஆராய்ச்சிகளெல்லாம் எடுபடவில்லை.

இப்படித்தான் ஒரு வேத சாகை என்றால், அதில் இருக்கப்பட்ட ஸம்ஹிதை, ப்ராம்மணம், ஆரண்யகம் என்ற பகுதிகளில் இதற்கு இது முந்தியது என்கிற ஆராய்ச்சியும் சரியில்லை. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது வேதம்; காலாதீதமான நிலையிலிருந்துகொண்டு திரிகாலங்களையும் பார்க்ககூடிய ரிஷிகள் கண்டுபிடித்துக் கொடுத்தது வேதம் என்பதை நம்பிவிட்டோமானால், எந்த காலக் கணக்கு ஆராய்ச்சியும் அதற்குப் பொருந்தாது என்று தெரியும். ரிக் வேதத்திலேயே பல இடங்களில் யஜுர் வேதம், ஸாம வேதம் முதலியவற்றைப் பற்றிய பிரஸ்தாவம் இருக்கிறது. ரிக்வேதம் பத்தாம் மண்டலத்தில் (தொண்ணூறாவது ஸக்தமாக) வருகிற புருஷ ஸக்தத்தில், இப்படி மற்ற வேதங்களைப் பற்றி வருகிறது. இதனாலேயே வேதங்களில் ஒன்று முன்னாடி, இன்னொன்று பின்னாடி என்றில்லை என்று தெரிகிறதல்லவா?

ஒவ்வொரு சாகையிலும் ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம் என்ற மூன்று உண்டு என்றேன். பொதுவாக வேத அத்யயனம் என்னும்போது இவற்றில் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் என்று மட்டுந்தான் அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ரிக்வேத ஸம்ஹிதையை மட்டும் புஸ்தகமாகப் போட்டு, அதற்கு " ரிக் வேதம் " என்று பெயர் கொடுத்து விடுகிறோம். ஏனென்றால் ஸம்ஹிதைதான் ஒரு சாகைக்கு ஆதாரமாக, உயிர் நாடியாக இருப்பது.

ஸம்ஹிதா என்றால், " ஒழுங்குபடுத்தி சேர்த்து வைத்தது " என்று அர்த்தம். ஒரு வேதத்தின் தாத்பர்யம் என்னவோ, அவ்வளவையும் ஸிஸ்டமாடிக்காகச் சேர்த்து மந்திரங்களாகக் கொடுத்திருப்பதுதான் ஸம்ஹிதை.

Contd..2..