சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் காடுகளிலும், மலைகளி லும், வனங்களிலும் குடில் அமைத்தும்,குகைகளிலும் தவம் இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இடர் பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள, கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும், சூட்சும மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.

அவைகளில் ஒன்றுதான் "பொன் ஊமத்தை" என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்...

காணவே பொன்னி னூமத்தை மூலி
கருவான மூலியடா கந்தர் மூலி
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும்
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே

தங்கமா மூலியது தழைதானாகும்
சாங்கமுடன் சொர்ணமென்ற பீசமாகும்
சிங்கமதைத் தான்மயக்குந் தழை தானாகும்
புகழான காயாதி இதற்கொவ்வாது
எங்கேனுந் தேடியுழைந் தலைந்திட்டாலும்
என்மகனே விதியாளி காண்பான் தானே
காண்பானே தழையினது மகிமையாலே
காவனத்தில் வசிக்கின்ற மிருகமெல்லாம்
ஆண்பான மதமடங்கி தன்முன்னாக
அப்பனே எதிர் வணங்கி பணியும் பாரு
சாண் பாம்பே யானாலு முந்தனுக்கு
சட்டமுடன் ஏவலுக்கு முன்னாய் நின்று
வீண்பாக முறையாம லடிவணங்கி
வித்தகனே முறைபாடாய் நடக்கும் பாரே

இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை ஆகும்.இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம்.இம்மூலிகையை இடித்து பிழிந்து சாரெடுத்து ரவி என்ற வெயிலில் காய விடவும்.பின்பு
தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.

இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும். ஒவ்வொரு முறை யும் புதுச்சாரு ஊற்ற வேண்டும். இது போல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான தங்கமாகும்.

இம் மூலிகையின் வாசனையால் சிங்கம் மயங்கும், யானை முதல் அனைத்து மிருகங்களும் வசியமாகும். எதிர் வந்தாலும் அடிவணங்கி பணியும். பாம்பு போன்ற ஜந்துக்கள் நம் சொல்லுக்கு கட்டுப் படும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendshttp://www.tamilastrology.net/