Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீவைஷ்ணவம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீவைஷ்ணவம்

    ஸ்வாமின்
    ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயதிலே இரு பிருவிகள் வடகலை ,தென்கலை என்பவர்களுக்கு ஆசார்ய சம்பந்தம் இருந்தாலும் அவர்களிலும் சிலர் தங்களை ஸ்வயம் ஆசார்யர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்களே. அவர்கள் ஸமாஸ்ரயண,பரன்யாஸங்களை யார் மூலம் அனுக்ரஹித்துக்கொள்வார்கள் .
    ஏன் அவர்கள் தங்களை ஸ்வயம் ஆசார்யர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் .

  • #2
    Re: ஸ்ரீவைஷ்ணவம்

    ஶ்ரீ:
    ஶ்ரீமடம், ஆச்ரமம் போன்ற எந்த ஒரு அமைப்பையும் சாராது, தங்கள் குடும்பத்திலேயே
    பரம்பரை பரம்பரையாக ஆசார்யராக இருந்து, சிஷ்யர்களுக்கு ச்யாமச்ரயணம், பரந்யாஸம்
    செய்துவருபவர்களுக்கு ஸ்வயமாச்சர்யர்கள் என்று பெயர்.
    ஸ்வாமி ராமாநுஜர் ஓராண்வழி ஆசார்ய பரம்பரை என்ற முறையை எளிமைப் படுத்தி
    74 சிம்மாஸனாதிபதிகளை ஶ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களாக நியமித்து, அவர்களை
    ச்யாமாச்ரயணாதிகளை சிஷ்யர்களுக்கு நடத்திவைக்குமாறு நியமித்தார்.
    அந்தப் பரம்பரையில் வந்த ஒவ்வொருவரும் சீலம், அநுஷ்டானம் மிக்கவர்களாக விளங்கி
    ஆசார்யர்களாக இருந்து சிஷ்யர்களுக்கு அந்வயம் செய்து வருகின்றனர்.

    ஒழுக்கம், சீலம், ஆசாரம் போன்றவற்றை கடைப்பிடிக்க முடியாத சில வம்சத்தினர்
    அவற்றை விட்டுவிட்டனர். தமக்கு நலம் எனத் தோன்றிய ஒரு ஆசார்யரை ஆச்ரயித்து
    வருகின்றனர்.
    வடகலை, தென்கலை இருபிரிவிலும் ஸ்வயமாச்சார்யர்கள் உண்டு.
    (அடியோங்கள் ஸ்வயமாச்சர்யர்கள், ஆனால் தற்போது எனது பரம்பரையில் இருந்து ஆண்டவன் ஸ்வாமியை ஆச்ரயிக்கிறோம்).
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: ஸ்ரீவைஷ்ணவம்

      why have you swamin become sishya sriof Andavan Ashramam when your ancestors have been swamacharya especially when you are following all " AAchara Anushtnams " and also a Brahaspati. Being a Brahaspati and swaymacharya will help many of your followers to get Samashrnam and Prapatti done at their homes.
      This is not to disrespect sri Andavan Aashramam. I think you are still entitled to do Samashrnam /Prapatti .

      Comment


      • #4
        Re: ஸ்ரீவைஷ்ணவம்

        Sri:
        Thanks for your interest about myself.
        1. Acharam and Anushtanam is not enough to become an acharyan, An acharyan should adopt one as his shishya to continue his duty. I mean, a previous acharyan should entrust his duties to a next person to become acharyan of his shishyas by doing upadesam of pancha samskara mantras and announcing to his shisyas.

        2. I became a bruhaspathi after 30 years of age from lowkika vruthi. So, I am not eligible for that.

        ஒன்று சொன்னால் தாங்கள் நம்ப மாட்டீர்கள்,
        அடியேன் வைதீக வ்ருத்திக்கு வருவதற்கு முன்புவரை,
        ப்ருஹஸ்பதியாக இருப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு உயர் ஜாதி
        நாம் சற்று தாழ்ந்த ஜாதி என்று எண்ணியிருந்தேன்.

        தற்போதுகூட பலருக்கு இதுபோன்றதொரு சந்தேஹம் இருப்பதாக அறிகிறேன்,
        ஏனன்றால் வடகலை ஐயங்காரில் பலபேர் மஞ்சள் ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளமாட்டார்கள்,
        அதை இட்டுக்கொள்ள உயர் வகுப்பினராக இருக்கவேண்டும் என்று ஒரு எண்ணம்.
        regs,
        nvs


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: ஸ்ரீவைஷ்ணவம்

          ஏனன்றால் வடகலை ஐயங்காரில் பலபேர் மஞ்சள் ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளமாட்டார்கள்,
          அதை இட்டுக்கொள்ள உயர் வகுப்பினராக இருக்கவேண்டும் என்று ஒரு எண்ணம்.

          well said; still this doubt exists. May I request you to clarify the significance of RED
          or YELLOW srisurnam and who all can wear it. Thank you

          Comment


          • #6
            Re: ஸ்ரீவைஷ்ணவம்

            ஶ்ரீ:
            இது ஒரு விநோதமான மனத்தாக்கத்தால் ஏற்பட்ட வழக்கம்.

            பெண்கள் அணியும் குங்குமம் ஆதி காலத்தில் இருந்தே கருஞ்சிவப்பு வண்ணத்தில் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
            இதனால், ஶ்ரீ என்னும் பிராட்டிக்கு உரியதான ஶ்ரீசூர்ணமும் அதே வண்ணத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக மஞ்சளில் சற்று எலுமிச்சை சாரு அல்லது அதுபோன்ற அமிலத்தன்மை கொண்ட
            பொருளை சற்று சேர்த்து வண்ணத்தை உண்டாக்கி, அதை ஶ்ரீசூர்ணமாக அணிந்து வந்தனர்.

            ஶ்ரீசூர்ணம் என்பது மஞ்சள்பொடியே (மஞ்சள் காப்பு) தவிர, வேறேதுமில்லை, எனவே அதில்
            அமிலத்தன்மை கொண்ட பொருளைச் சேர்த்து அணிவது அபசாரம் என சில பண்டிதர்கள்
            முடிவுசெய்து, வஸ்த்ரகாயம் செய்யப்பட்ட மஞ்சளையே ஶ்ரீசூர்ணமாக அணியத் துவங்கினர்.

            எப்போதும், ஒரு பழைய வழக்கத்தை புதிதாக யாராவது மாற்றினால், அதற்கு எதிர்ப்பு ஏற்படுவதும்
            வழக்கம். இப்படி ஒரு எதிர்ப்பும் அதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று ஒரு குழு மறுத்து, பழையபடி
            கருஞ்சிவப்பு வண்ணத்திலேயே ஶ்ரீசூர்ணம் அணிந்து வந்தனர். இப்படி மறுத்தவர்கள் பெரும்பான்மையினர், தென்னாச்சார்ய வகுப்பினராய் இருந்ததால், காலப்போக்கில் தென்கலையார் சிவப்பு என்றும், வடகலையார் மஞ்சள் என்று நிலைப்பாடு ஏற்பட்டுவிட்டது.
            மஞ்சளை ஏற்றுக்கொண்டு அநுசரித்தவர்கள் பெரும்பாலும் நல்ல ஆசார, அநுஷ்டானம் உள்ளவர்களாயும், கல்விமான்கள், மஹான்களாகவும், நீண்ட, தொன்மையான ஆசார்ய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால், வடகலையிலும் சிலபேர் அடியேன் முன்பே குறிப்பிட்டதுபோல நமக்கு இது தகுதியில்லை என எண்ணி சிவப்பையே அணிந்துவருகிறார்கள்.

            குறிப்பு:- இது அநுபவத்தால் ஏற்பட்ட ஆராய்ச்சி முடிவே தவிர, இதற்கெல்லாம் ஆதாரம் என்ன என்று கேட்டால், அடியேனிடம் எதுவும் இல்லை. ஆனால், தற்போதும்கூட மஞ்சள் ஶ்ரீசூர்ணம் அணிந்துள்ளவர்கள் பெருன்பான்மையாக நல்ல ஆசார, அநுஷ்டானத்துடன் இருப்பதும், ஆசார்ய பரம்பரையைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பது கண்கூடு.
            மற்றபடி இருபிரிவிலும் இருவிதமானவர்களையும் பார்க்கமுடியும் என்பதையும் மறுக்கமுடியாது.
            என்.வி.எஸ்


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: ஸ்ரீவைஷ்ணவம்

              Sri:
              Originally posted by Priya Radhi View Post
              well said; still this doubt exists. May I request you to clarify the significance of RED
              or YELLOW srisurnam and who all can wear it. Thank you
              Note:- If you want to Quote a portion of text in your reply, click the "Reply with Quote" button instead of directly typing on the Quick Reply editor. It will bring all the text of previous post, then you can delete the unwanted portion of text by keeping the text which you want to quote.
              It will look nice and easy to identify who said this.
              I have used the method for an example in this post.
              Don't mistake me, this is to inform you and all other members,
              that there is a facility to easy your work (No need to copy and paste).
              NVS


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment

              Working...
              X