குருக்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் கடும்போர். அர்ஜுனன் அடித்த அம்பில், கர்ணனின் தேர் முப்பது காத தூரம் தள்ளிப்போய் விழுந்தது. பெருமை தாங்காத அர்ஜுனன், தேரோட்டிக் கொண்டிருந்த கண்ணனிடம், இதுபற்றி

பெருமையாகப் பேசினான். கண்ணன் அண்ணாந்து பார்த்தார். தேரில் பறந்த கொடியில், அமர்ந்திருந்த அனுமனிடம், ""கீழே குதி'' என்றார். அர்ஜுனனிடம்,""மைத்துனா! கடந்த யுகத்தில் அனுமனிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டியிருந்தது. அப்போது, மறந்து விட்டேன். இப்போது தான் ஞாபகம் வந்தது. அவனிடம் பேசிவிட்டு வருகிறேன்,'' என்றவர், அனுமனுடன்
மறைந்து விட்டார்.
பின், கர்ணன் விட்ட அம்புகளின் பலம் தாங்காமல், அர்ஜுனனின் தேர் 35 காததூரம் பின்னால் போய் விழுந்தது. கண்ணன் அனுமனுடன் திரும்பி வந்தார். ""என்னப்பா! என்னவோ வீரம் பேசினாயே! நீயே உன் வீரத்தை மெச்சிக் கொள்ளாதே. பலமிக்க அனுமனும், நானும் இருந்ததாலேயே உன்னால் தாக்குப்பிடிக்க முடிந்தது,'' என்றார்.
அதிருக்கட்டும்...அனுமனிடம் கண்ணன் பேசிய ரகசியம் என்ன! யாருக்குத் தெரியும்...ஆனால், உத்தேசமாக ஒன்றை உணர முடிகிறது. ""உன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று எண்ணாதே. எல்லாமே இறைவனால் தான் நடக்கிறது,'' என்ற ரகசியத்தை அனுமனுக்குப் போதித்திருப்பாரோ!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends