கிருஷ்ணர் ஒருமுறை காட்டுவழியே சென்றார். வழியில் மகரிஷிகள் ஜபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கைகள் மேலும் ஜபமாலையை நகர்த்தாமல் அப்படியே நின்று விட்டது. சில ரிஷிகள் யாக சாலையில் "ஸ்வாஹா' மந்திரம் சொல்லி நெய்யை அக்னியில் சேர்த்துக் கொண்டிருந்தனர். அவர்களும் பொம்மையைப் போல அப்படியே கையைத் தூக்கியபடியே அசைவற்றுப் போயினர். ஜபம்,தவம் போன்ற ஆன்மிகச் சாதனை எல்லாம் பரம்பொருளான கிருஷ்ணரை அடைவதற்காகத் தான். கடவுளையே நேரில் கண்ட பின், இவை எல்லாம் எதற்கு என்று அந்த ரிஷிகள் ஆனந்தத்தில் மெய் மறந்து விட்டதே இதற்குக் காரணம். பத்து அஸ்வமேதயாகம் செய்த பாக்கியசாலி கூட மீண்டும் பிறவி எடுக்க வாய்ப்புண்டு. ஆனால், கிருஷ்ணரை வணங்கியவர்க்கு மீண்டும் பிறவி உண்டாகாது என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபிக்கப்படுகிறது. இதனால் எந்தச் செயலைச் செய்தாலும் "கிருஷ்ணார்ப்பணமாக' செய்ய வேண்டும் என்று சொல்வர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends