பெண்களே! வீட்டுக்காரர் துணி துவைக்கச் சொல்லி வற்புறுத்துகிறாரா? அவரிடம் காஞ்சி மகாபெரியவர் அருளிய இந்த உரையைப்படிக்கச் சொல்லுங்க!
சாஸ்திரத்தில் அவனவனும் தன் வஸ்திரத்தை, தானே தோய்த்துப் போட்டுக் கொள்ளணும், தன் சாதத்தை தானே களைந்து வைத்துப் பொங்கித் தின்ன வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. இதைத் தான் "ஸ்வயம்பாகம்' (சுயமாகச் செய்தல்) என்பார்கள். ""கந்தையானாலும் கசக்கிக் கட்டு'' என்கிறபோது "கட்டிக் கொள்வது' மட்டும் இவன் என்றில்லை; "கசக்க' வேண்டியவனும் இவன் தான்! "அம்மாவையோ, வேறு யாரையோ கசக்கும்படி பண்ணி(மனசும் கசக்கும்படி பண்ணி) நீ கட்டிக் கொள்' என்று இல்லை.
ஒருத்தனுடைய நித்ய சர்யைகளை(அன்றாட நடவடிக்கைகளை) தர்ம சாஸ்திரத்தில் சொல்கிறபோது, அவன் கார்யம் முழுவதையும் அவனே பார்த்துக் கொள்ளும்படி தான் வைத்திருக்கிறது. பூஜைக்குப் புஷ்பம், பத்ரம் கூட அவனவனே தான் பறித்துக் கொள்ள வேண்டுமென்று இருக்கிறது. ஆனாலும், குருமாதிரி ஸ்தானத்தில் இருக்கிற ஒரு பெரியவர், வயோதிகர், மாதா பிதாக்கள் ஆகியவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது புண்யம் என்பதால் இப்படிப்பட்டவர்களுக்காக சிஷ்ய ஸ்தானத்தில், புத்திர ஸ்தானத்தில் இருப்பவர்கள் வஸ்திரம் தோய்த்துப் போடுவது, புஷ்பம் பறித்து வருவது, பூஜா கைங்கர்யம் பண்ணுவது என்றெல்லாம் செய்யணும். இதுவே சாஸ்திரக் கட்டளை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபெண்களுக்கு சொல்கிறார் பெரியவர்