அவ்வைப்பாட்டி செய்திருக்கிற நூல்களில் நல்வழி என்பது ஒன்று. மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இதில், ""சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அவாயம்(அபாயம்) ஒரு நாளுமில்லை'' என்று வருகிறது.
"சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்'. அதாவது "பாபி' என்று அர்த்தம். அப்படியானால் சிவநாமம் சொல்லி விட்டால் பாவம் போய் விடும் என்று தானே அர்த்தம்? எப்படி சொல்ல வேண்டும்? ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக் கொண்டு மூச்சை
கீச்சை அடக்கி ரொம்ப நியமமாகச் சொல்ல வேண்டுமா? சிவனை நினைத்து மனசைச் செலுத்தி புத்தி பூர்வமாக அவன் பேரைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. "சிவப்பு' "அரிசிவடாம்' என்கிற மாதிரி எதையோ சொல்லிக் கொண்டு போகும்போது, சிவப்பிலுள்ள "சிவ', அரிசிவடாமில் நடுவில் இருக்கும் "சிவ' என்ற இரண்டெழுத்து வந்து விட்டால் கூடப் போதும். அரட்டைப்
பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் "சிவ' என்ற இரண்டு அக்ஷரத்தை அறியாமல் சொல்லி விட்டாலும், அதுவே சமஸ்த(எல்லா) பாபத்தையும் போக்கிவிடும். தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ பாவம் பண்ணிவிட்டோம். அது தான் நம்மை மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா அந்த தடையைப் போக்கி மோட்சத்தைக் கொடுத்து விடும்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks