அமாவாசை.
இந்த நாளில், நம் முன்னோருக்கு அவசியம் தர்ப்பணம், திதி கொடுக்க வேண்டும். இது குறித்து காஞ்சிப்பெரியவர் சொல்வதைக் கேளுங்கள். ஒரு ஜீவன்(உயிர்) இருக்கும் போதும், இறக்கும் போதும், இறந்த பின்பும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஒருவர் இறந்த பின் திவஸம், திங்கள் எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடாது. பித்ரு காரியங்கள் பரோபகாரத்தைச் சேர்ந்தவை. பித்ருக்கள்(முன் னோர்) எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா(பிறவி) எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு, இங்கே செய்யும் தர்ப்பணம் திருப்தியை உண்டாக்கும். ஒருத்தர் செத்துப் போனவுடனேயே பித்ருலோகம் போய் விடுவதில்லை. இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை. இறந்து போனவரின் ஜீவன்(உயிர்) ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்திரங்களில் இருக்கிற மாதிரியே "கிரீக் மைதாலஜி' (கிரேக்கபுராணம்) முதலான மதாந்திரங்களிலும் சொல்லியிருக்கிறது. ஜீவன் வைதரணியைக் (எமலோகம் செல்லும் வழியிலுள்ள ஆறு) கடந்து யமபட்டணம் போக வேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு போக வேண்டும் என்கிறார்கள். ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்குப் பிடிக்கிற இந்த ஒரு வருஷத்தில் தான் அதன் திருப்திக்காக மாசா மாசம் சில சடங்குகளைச் செய்கிறோம். இவையெல்லாம் ஒரு ஜீவனை பரமாத்மாவிடம்(கடவுளிடம்) கொண்டு சேர்க்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம்(மிக உயர்ந்த சேவை).
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks