21. அந்ந ஹோமம்


ப்ராசீனாவீதி.
பித்ரு ஸ்வாமியைப் பார்த்து கேட்கறது.
உத்திரியதாம் அக்நௌச க்ரியதாம்?
உத்ருதமன்னம் அக்நாவதிஸ்ரித்யா. அபிகார்ய. ப்ராசீனம் உதீசீனம்வா உத்வாஸ்ய. ப்ரதிஷ்டிதம் அபிகார்ய.
சாதம், வடை, கரமது தொன்னைகளை நெய்விட்டு அக்நிக்கு நைவேத்தியமா காமிக்கறது. இடது கைப் பக்கம் கீழ வச்சுடறது. திரும்பவும் ரெண்டுலயும் நெய் சேர்க்கறது.
தர்வ்யாம் த்விருபஸ்தீர்யா.
பெரிய இலையை பிரிச்சு இடது கையில வச்சுண்டு, சின்ன இலையால நெய்யத் தொட்டு 2தரம் தொடைச்சுக்கறது.
மத்யாத் த்விரவதாய. ஸக்ருத் அபிகார்யா.
(வத்ஸானாம் த்ரிரவதானம்.)
மத்தியிலேருந்து 2தரம் சுண்டைக்காயளவு சாதம் எடுத்து வைச்சுக்கறது. தொன்னை ஜலத்துல கை அலம்பிக்கறது. ஒரு தரம் நெய் விட்டுக்கறது.
வலது கையில வாங்கிக்கறது. இடது கையால சாததொன்னைய தொட்டுக்கறது.
இதுமாதிரி மொத்தம் 7 ஹோமம். (ஸ்ரீவத்ஸ கோத்ராளுக்கு 3 தரம் சாதம்.)

1. யந்மே -மாதா -ப்ரலுலோப -சரதி -அநநுவ்ரதா -தன்மே ரேத: -பிதாவ்ருங்தாம் -ஆபு: -அன்ய: -அவபத்யதாம்

மந்திரமும் அதன் பொருளும்:

மந்திரம் ::என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...

பொருள் :: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது. என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர்.

இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, பூசாரி சொல்லச் சொல்ல மகன்கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும் போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

THANK FOR : ராமானுஜ தாத்தாச்சாரியார்

மந்திரமும் அர்த்தமும்.:

மேற்படி மந்திரத்தையும் அர்த்தத்தையும் ஸ்ரீ இராமானுஜதாதாசாரியர் அவர்கள்
புரோஹிதர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறாரே. அப்படி என்றால் ஏன் அந்த மந்திரத்தை உச்சரிக்கவேண்டும் .ஒரே குழப்பமாக இருக்கிறதே.தங்களுடைய மேலான அப்பிப்ராயம் என்ன ?