Horse Gram makes US Race Horse !! கொழுப்பைக் கரைக்கும் கொள்ளூ. . .
இளைத்தவனுக்கு எள்ளுகொழுத்தவனுக்கு கொள்ளு` என்பர் பெரியோர். நாம்கொள்ளுவை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கெட்டகொழுப்பு நம் உடலில் சேரவிடாமல் தடுத்து விடும். கொழுப்பைக் கரைக்கும்கொள்ளு!
புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின்சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்என்றுஅழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்குகொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லதுஎன்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள்சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.
ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும்உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.
கொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில்கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும்.ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிகசுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இம்முறை நாம் கொள்ளு பருப்பு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தேவைப்படும் போது உபயோகிக்கலாமா?
Bookmarks