வேதம் - பிராம்மணம், ஆரண்யகம்

இதுவரைக்கும் நான் வேதம் என்று சொன்னதெல்லாம், அநேகமாக ஒரு வேத சாகையின் ஸம்ஹிதா பாகத்தைத்தான். ஸம்ஹிதைதான் வேதத்தின் main text . இதைத் தவிர, ஒவ்வொரு வேதத்திலும் ப்ராஹ்மணம் என்று ஒரு பாகமும், ஆரண்யகம் என்று ஒரு பாகமும் உண்டு.

ப்ராஹ்மணம் என்ற பாகத்தில் வைதிகமான கர்மாக்கள் இன்னின்ன வென்று விதிக்கப்படுகின்றன. அவற்றை இப்படி இப்படிச் செய்யவேண்டும் என்றும் அவற்றில் விளக்கியிருக்கிறது. வேத ஸம்ஹிதையில் வருகிற மந்திரங்களை யக்ஞம் என்ற காரியமாக்குகிறபோது இன்னின்ன வார்த்தைக்கு இப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றும் பிராம்மணத்தில் சொல்லியிருக்கும். யக்ஞாதி கர்மாக்களைப் பண்ணுவதற்கு இவை guide-book என்றும் சொல்லலாம்.

ஆரண்யகம் என்பதில் 'ஆரண்ய'என்ற வார்த்தை இருக்கிறது. தண்டகாரண்யம், வேதாரண்யம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அரண்யம் என்றால் காடு. வேத ஸம்ஹிதையிலோ, பிராம்மணத்திலோ "வீட்டை விட்டுக் காட்டுக்குப் போ"என்று சொல்லியிருக்கவில்லை. வீட்டிலே வாழ்ந்து கொண்டு கிருஹஸ்த தர்மத்தை (இல்லற வாழ்நெறியை) நடத்திக் கொண்டு வரும்போது பண்ண வேண்டியதுதான் யக்ஞம் முதலான வைதிக கர்மாநுஷ்டானங்கள். ஆனால், இவற்றால் சித்த சுத்தி ஏற்பட்டபின், காட்டுக்குப் போய் மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்காரத்தான் வேண்டும். அதற்கான பக்குவத்தை அடைவதற்குத்தான் அத்யயனமும், யக்ஞ கர்மானுஷ்டானமும் பூர்வாங்கம். காட்டுக்கு ஒடுவதற்குத் தயார் பண்ணுவதுதான் ஆரண்யகம்.

ஸம்ஹிதையில் மந்திரமாகவும், பிராம்மணத்தில் கர்மாவாகவும் இருப்பதன் தத்வார்த்தம் என்னவோ, உள்பொருள் என்னவோ அந்த ஸித்தாந்தங்களை, ஃபிலாஸபியை, விளக்குவதற்கே ஆரண்யகங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsமறை பொருளாகவும், உருவகமாகவும் வேதத்தில் சொல்லியிருப்பதை ஆரண்யகம் விண்டு விளக்கும். யாகம் பண்ணுவதைவிட அதன் உள்ளர்த்தத்தை விசாரணை செய்வதுதான் ஆரண்யகங்களுக்கு முக்கியம். காட்டிலே (ஆரண்யகங்களிலே) ஆசிரமவாஸிகள் சேர்ந்து பண்ணின இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் ரூபமாகவே ஆரண்யகங்களை இக்கால அறிவாளிகள் கருதுகிறார்கள். ஆரண்யகமாகவும் உபநிஷத்தாகவும் சேர்ந்து இருக்கப்பட்ட ப்ருஹதாரண்யக உபநிஷத், அச்வமேத யாகத்தைப் பற்ரிய இப்படிப்பட்ட தத்வ விளக்கத்தோடுதான் ஆரம்பிக்கிறது.
Source:subadra