Announcement

Collapse
No announcement yet.

வேதம் - பொதுவான பெருங் கருத்து

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் - பொதுவான பெருங் கருத்து

    வேதம் - பொதுவான பெருங் கருத்து

    இப்படி வேதங்கள் பலவாக இருந்தாலும், அதில் ஒவ்வொன்றைச் சேர்ந்தவர்களிடையே ஆசாரங்களில் சில வித்தியாஸங்கள் இருந்தாலும், எல்லா வேதங்களும் ஒரே லக்ஷ்யத்தை உடையவைதான். ஸமஸ்த லோகத்திற்கும், ஸகல ஜீவ ஜந்துக்களுக்கும் க்ஷேமத்தைக் கோருவதும், அவனவன் ஆதாமாவை அபிவிருத்தி பண்ணிக்கொண்டு, ஸத்ய தத்வத்தோடு சாச்வதமாகச் சேர்ந்து விடுவதும்தான் எல்லா வேதங்களுக்கும் பொதுவான லக்ஷ்யம்.

    வேதங்களில் பொதுவான இன்னொரு பெருமை, 'இது ஒன்றுதான் வழி', 'இது ஒன்றுதான் தெய்வம்' என்று அது சொல்லாமல், சிரத்தையோடு எந்த மார்க்கத்தை அனுஸரித்து, எந்தத் தேவதையை எப்படி உபாஸித்தாலும், அதுவே சத்தியமான ஒரு வழியில் கொண்டு விட்டுவிடும் என்பதுதான். வேதம்தவிர இந்த மாதிரிப் பல வழிகளை ஆதரித்துப் பேசுகிற மதப் பிரமாண நூல் வேறெதுவுமே லோகத்தில் இருக்கவில்லை. தன் வழி ஒன்றே மோட்ச மார்க்கம் என்றுதான் அந்தந்த மதத்தின் மூலநூலும் சொல்லும். ஒரே ஸத்தியத்தைப் பல பேர் பல தினுசாகக்கண்டு கொள்ளலாம் என்று விசால மனப்பான்மையோடு சொல்வது வேதம் மட்டும்தான்.

    Source: subatra
Working...
X